இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் 3வது நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தமிம் இக்பால் 133, ஓட்டங்களுடன் காயத்தினால் மைதானத்திலிருந்து வெளியேறினார். முகமதுல் ஹசன் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 58 ஓட்டங்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 53 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தமிம் இக்பால் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, உபாதை ஏற்பட்டதால் retired hurt முறையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். அவர் நாளை மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 397 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. பங்களாதேஷ் தற்போது 79 ஓட்டங்கள் பின்தங்கியயுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1