நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை அடித்துக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலரி மாளிகையின் முன்பாகவும், காலி முகத்திடலிலும் அமைதி வழியில் போராடியவர்கள் மீது கடந்த 9ஆம் திகதி பொதுஜன பெரமுன குண்டர்கள் அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பொதுஜன பெரமுனவினர் மீது அகோர தாக்குதல் நடத்தப்பட்டது.
பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் நிட்டம்புவவில் அடித்துக் கொல்லப்பட்டனர்.
கொழும்பில் அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் திரும்பி வருகிறார்கள் என்ற தகவல் பரவியதையடுத்து, நிட்டம்புவ பகுதியில் ஒன்றுகூடிய பெருமளவானவர்கள் வாகனங்களை மறித்து சோதனையிட்டனர்.
பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொழும்பிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, இளைஞர் குழுவால் வழிமறிக்கப்பட்டார்.
அமரகீர்த்தி அத்துகோரளை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை தெரிந்ததும், அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
இதன்போது, அமரகீர்த்தி அத்துகோரளவின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது. இதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் அந்த குழுவினர் ஆத்திரமிகுதியால் வாகனத்தை புரட்டிப் போட்டு அடித்து உடைத்தனர்.
அமரகீர்த்தி அததுகோரளவும், மெய்ப்பாதுகாகலரும் ஓடிச்செல்லும் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
தப்பியோடிய இருவரும் துணிக்கடை ஒன்றின் மூன்றாவது மாடியில் ஒளிந்துள்ளனரை். அங்கு வந்தே அமரகீர்த்தி அத்துகோரளவும், அவரது மெய்ப்பாதுகவலரான 27 வயது பொலிஸ் உத்தியோகத்தரும் அங்கு வைத்தே அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொலை இடம்பெற்ற இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.