இலங்கை

மஹிந்தவை கைது செய்ய உத்தரவிட கோரி மனு!

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலின் மூலம், குற்றவியல் மிரட்டலுக்கு சதி செய்தமை மற்றும் உதவிசெய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி சேனக பெரேராவினால் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு நேற்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

Leave a Comment