ஆளும் பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர்களின் வீடுகள் மீது நேற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதல்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 232 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, நாலக ஹொடகேவ, டொக்டர் ரமேஷ் பத்திரன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (சில வீடுகள், அலுவலகம், வர்த்தக நிலையங்கள்), பிரசன்ன ரணதுங்க, கலாநிதி பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, காமினி லொகுகே, விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, கனக ஹேரத், ஷெஹான் சேமசிங்க, காஞ்சனா விஜேசேகர, விதுர விக்கிரமநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், ஷெஹான் சேமசிங்க, அருந்திக பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமண, மொஹான் பி டி சில்வா,
முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரின் வீடுகள் தாக்கப்பட்டன. நஸீர் அஹமட்டின் அலுவலகம் எரியூட்டப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, சாந்த பண்டார, குணபால ரத்னசேகர, சிறிபால கம்லத், டி.பி ஹேரத், நிமல் லான்சா (வீ:, சொகுசு ஹொட்டல், லம்போகினி கார்கள்), துமிந்த திசாநாயக்க, கீதா குமாரசிங்க, பிரசன்ன ரணவீர, அசோக பிரியந்த, மிலன் ஜயதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோகிலா குணவர்தன, உத்திக பிரேமரத்ன,அலி சப்ரி ரஹீம், அமரகீர்த்தி அத்துகோரல, திஸ்ஸ குட்டியாராச்சி, சந்திம வீரக்கொடி, நிபுன ரணவக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ,
அகில எல்லாவல, சஞ்சீவ எதிரிமான்ன, சமன்பிரியா ஹேரத், ராஜிக விக்கிரமசிங்க,
டபிள்யூ.டி.வீரசிங்க, அனுபா பாஸ்குவல், சஹான் பிரதீப் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மக்களால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.
மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான குருநாகலில் உள்ள வீட்டிற்கும் மக்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
தலங்கமவில் போராட்டம் நடத்திய பொதுமக்களை, அடியாட்களை ஏவி அச்சுறுத்திய கட்டிட ஒப்பந்தக்காரரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டதுடன், அவருக்கு சொந்தமான கனரக வாகனங்கள் தீயிடப்பட்டன.
அரசுக்கெதிரான அமைதிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு குண்டர்களை ஏற்றிச் செல்ல பேருந்துகளை வழங்கிய உரிமையாளரின் மாத்தறை வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
தாக்குதல்கள் மற்றும் தீ வைப்புகளால் அந்த வீடுகளில் இருந்த வாகனங்கள் கூட முற்றாக அழிக்கப்பட்டன.
அமைதிக் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலிற்கு முன்னதாக அலரி மாளிகையில் நடந்த மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்து கொண்ட மற்றும் பொதுஜன பெரமுன உள்ளூராட்சிமன்ற தலைவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டன.
கரந்தெனிய பிரதேச தலைவர் காமினி அமரவன்ச. கம்பஹா மாநகரசபை தலைவர் எரங்க சேனாநாயக்க, பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட, தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் சுஜீவ வெடகே, பன்னல பிரதேச சபையின் தலைவர் ரஞ்சித் லஞ்சக்கார, புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நிமல் பமுனுஆராச்சி, கெஸ்பேவ நகரசபை தலைவர் லக்ஷ்மன் பெரேரா, பிங்கிரிய பிரதேச சபையின் தலைவர் திமுத் துஷார ஏகநாயக்க, பலாங்கொட பிரதேச சபையின் தலைவர் சுனில் பிரேமசிறி, தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் சுஜீவ வெடகே, பண்டாரகம பிரதேச சபையின் தலைவர் தேவேந்திர பெரேரா, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, நீர்கொழும்பு மாநகரசபை தலைவர் தயான் லான்சா, பியகம பிரதேச சபையின் பிரதித் தலைவர் அஜித் குமார ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டன.
கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டக்காரர்களை தாக்கிய மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு குண்டர்களை ஏற்றி வந்த வாகனங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் பேருந்துகள் உட்பட 97 வாகனங்கள் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல வாகனங்கள் அலரி மாளிகைக்கு அருகிலுள்ள பேர வாவிக்குள் தள்ளப்பட்டதையும் காணமுடிந்தது.
இந்த மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேசசபை தலைவர், கலக தடுப்புப் பிரிவின் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 9 பேரும் கொல்லப்பட்டதுடன், 232 பேர் காயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்டுள்ளார்.
இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமாரவும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது வீடு நேற்று முன்தினம் இரவு (9) தாக்கப்பட்டதுடன், காயமடைந்த தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.