29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

சுயேச்சை அணி நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தீர்மானம்!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென, அரசிலிருந்து விலகிய 11 கட்சிகளின் சுயேச்சை அணி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் பதவிவிலகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க முயலவில்லையென்றால், சுயேச்சை அணியின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்பதென்றும் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சைகள் குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்று கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியபோதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

பிரதமர் பதவிவிலகிய பின்னர் ஆட்சியைக் கைப்பற்றும் பொறுப்பில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி விலகிக் கொண்டால்,  பல கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்டால், அதை ஆதரிப்பதென்றும் முடிவானது.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, உதய கம்மன்பில, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஜயந்த சமரவீர, டி.யூ.குணசேகர உள்ளிட்டவர்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment