அம்பாறை, பாலமுனையில் பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சோதனைச் சாவடிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த மோதலில் காயமடைந்த 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு 11 .30 மணியளவில் இந்த களேபரம் இடம்பெற்றது.
காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்தனர். அவர்கள் சற்று தொலைவில் சென்று மோட்டார்சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து பொலிசார் தம்மை தாக்கியதாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறிப்பிட்டதுடன், அது குறித்து பிரதேசவாசிகளிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமைமோசமடைந்துஅங்குபெரும் களேபரம் ஏற்பட்டது. பொலிஸ் சோதனைச் சாவடிக்கு மக்கள் தீவைத்தனர்.
Police clash with civilians at Adalaichenai, Palamunai. Police checkpoint set on fire! #lka pic.twitter.com/LR1HC1dMVD
— Pagetamil (@Pagetamil) May 6, 2022
நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் வானத்தைநோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார், ஊடகவியலாளர், பொதுமக்கள் என 16 பேர் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220506_072140_049.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2022/05/IMG_20220506_072128_876.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2022/05/attack-2.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2022/05/attack-3.jpg)
-பா.டிலான்-