Pagetamil
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!

ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடையாளப்பூர்வமாகவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மீதான நம்பிக்கையை பாராளுமன்றம் இழந்துவிட்டதாகவும், அது சட்டப்படி கட்டுப்படாததால், அதன் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்பதை சுட்டிக்காட்டுவதற்காக அது  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டியிருக்கும்.

ஏப்ரலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பதவி நீக்கப் பிரேரணையில் கையொப்பமிட்டார்.

இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இரண்டு பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது!

Pagetamil

யாழ் மாநகரசபையில் மணிவண்ணன் தரப்பின் வேட்புமனு நிராகரிப்பு: யாழில் சங்கின் நிலை பரிதாபம்!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் புதிய கூட்டு!

Pagetamil

பிணை இல்லை: தென்னக்கோனுக்கு ஏப்ரல் 3 வரை விளக்கமறியல்!

Pagetamil

மே 6ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்!

Pagetamil

Leave a Comment