27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இந்தியா

அகதிகள் போர்வையில் தமிழகத்திற்குள் நுழைந்தவர்கள் யாழ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: சிறையில் அடைக்கப்பட்டனர்!

யாழ்ப்பாணம், குருநகரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களும், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொலிசாரிடம் சிக்கியதும் தஞ்சம் கோரி வந்தவர்களை போல அவர்கள் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து வாழ வழியில்லாத மக்கள், படகு மூலம் தமிழகத்திற்கு தஞ்சம் கோரி செல்கிறார்கள். தமிழகத்திற்குள் இதுவரை 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களிடம் கடலோரக் காவல் குழும போலீஸார் மற்றும் மரைன் போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னர், அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்தனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம், தொண்டி கடற்கரைப்பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை கடலோர காவல்படை போலீஸர் பிடித்து மரைன் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் மரைன் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள்  யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசீலன், அருள்ராஜ் என்பது தெரியவந்தது.

இலங்கையில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் பசி பட்டினியுடன் வாழ்ந்து வருவதாகவும், அதனால் அகதிகளாக கள்ளத்தோணி மூலம் தமிழகம் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் கைகளில் எந்த உடமைகளும் எடுத்து வராததால் சந்தேகம் அடைந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஆவர்களின் புகைப்படங்களை யாழ்ப்பாணம் போலீஸாருக்கு, தமிழக பொலிசார் அனுப்பி விசாரித்தபோது, அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது.

அதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த மரைன் போலீஸார் அவர்கள் தமிழகத்திற்கு போதைப்பொருகள் ஏதேனும் கடத்தி வந்தார்களா என விசாரணை நடத்தினர்.

பின்னர் இருவரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை

east pagetamil

சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி

Pagetamil

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

Pagetamil

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” – விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

Pagetamil

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு

Pagetamil

Leave a Comment