28.2 C
Jaffna
June 28, 2022
முக்கியச் செய்திகள்

2 வருடங்களில் தலைகீழ் மாற்றம்: அன்று சுவர்களில் சித்திரம்… இன்று பிரதமரின் வதிவிட சுவரில் எதிர்ப்பு வாசகம்!

விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ வதிவிட சுற்றுமதிலில் போராட்டக்காரர்களால் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு வருகிறது.

இன்று பல்கலைகழக மாணவர்கள் பேரணியாக வந்து மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வதிவிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன்போது, போராட்டக்காரர்கள் பிரதமரின் வதிவிட உத்தியோகபூர்வ இல்ல வெளிப்புற மதிலில் பல்வேறு வாசகங்களை எழுதி வருகிறார்கள்.

இரண்டு வருடங்களின் முன்னர் பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, நாடு முழுவதிலுமுள்ள பொது இடங்களில் சித்திரம் வரையும் ‘அலையை’ அரசு உருவாக்கியது.

இரண்டு வருடங்களில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு, பிரதமரின் உத்தியோகபூர்வ வதிவிட மதிலில், அரசுக்கு எதிரான வாசகங்களை மக்கள் எழுதும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தமிழ் தேசிய கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டு கடிதம்: யாழில் தலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர்!

Pagetamil

வடக்கு, கிழக்கு சிறைகளிற்கு எம்மை மாற்றுங்கள்: தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

Pagetamil

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவிப்பிரமாணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!