உக்ரைனிற்கு எதிரான போரில் கடற்படைக்கு தலைமை தாங்கிய ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
க என்ற ஏவுகணை கப்பல் மூழ்கியதில் அதன் பணியாளர்கள் பலியாகினர் என்பதை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது
“ஒரு படைவீரர் கொல்லப்பட்டார், மற்றொரு 27 பணியாளர்கள் காணவில்லை,” என்று அமைச்சு கூறியது.
மீதமுள்ள 396 உறுப்பினர்கள்” வெளியேற்றப்பட்டனர்.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் முதன்மையான போர்க்கப்பலான மொஸ்க்வா, கடந்த வாரம் தீப்பற்றி கடலில் மூழ்கியது.
கப்பலில் வெடிமருந்து வெடித்ததைத் தொடர்ந்து தீயில் மூழ்கியதாக ரஷ்யா கூறியது. ஆனால், நெப்டியூன் என்ற ஏவுகணை வீசி கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் கூறியது.
அத்துடன், ரஷ்யாவின் இலக்குகள் குறித்த தகவல்களை உக்ரைனுடன் பகிர்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. மொஸ்க்வா தாக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க உளவு விமானமொன்று கருங்கடலில் பறந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.