29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

குண்டுவெடிப்பின் பின் இலங்கையில் 3வது உயிர்த்த ஞாயிறு!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள், இசை, மெழுகுவர்த்தி விளக்குகள், தேவாலய மணிகள் முழங்க கொண்டாடுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் பின்னர், இன்று மூன்றாவது உயிர்த்த ஞாயிறு தினமாகும்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில், தேவாலயங்களிற்கு சென்ற 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து ஒன்பது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரி கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்து போராடி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment