மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகியுள்ளது.
இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
விளையாட்டுக் கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஓகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சிலை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நியமித்தார்.
தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மஹேல ஜயவர்தன – தலைவர், ஜூலியன் பொலிங் – குழு உறுப்பினர், குமார் சங்கக்கார – குழு உறுப்பினர், டிலந்த மலகமுவ – குழு உறுப்பினர், கஸ்தூரி செல்லராஜா வில்சன் – குழு உறுப்பினர், சுபுன் வீரசிங்க – குழு உறுப்பினர், ரொஹான் பெர்னாண்டோ – குழு உறுப்பினர், ருவன் கேரகல – குழு உறுப்பினர், சஞ்சீவ விக்கிரமநாயக்க – குழு உறுப்பினர், ஜெனரல் ஷவேந்திர சில்வா – குழு உறுப்பினர், மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹொட்டி – குழு உறுப்பினர், ரொவேனா சமரசிங்க – குழு உறுப்பினர், யஸ்வந்த் முத்தேடுவேகம – குழு உறுப்பினர், ஏ.ஜே.எஸ்.எஸ் எதிரிசூரிய – குழு உறுப்பினர், தியுமி அபேசிங்க – செயலாளர்.