25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

UPDATE: இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி துறக்க தயாராகிறார்!

மாகாணசபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் விவசாயிகளிற்கு நட்டஈடு வழங்கவும், உர மானியத்தை வழங்கவும் முடியாவிட்டால், தனது அமைச்சு பதவியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்தும் மே 1ஆம் திகதி முதல் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இரசாயன உர பாவனை நிறுத்தப்பட்டதன் காரணமாக விளைச்சல் குறைந்துள்ள விவசாயிகள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நட்டஈட்டை புத்தாண்டுக்கு  முன்னதாகவோ, பின்னதாகவோ- ஏப்ரல் இறுதிக்குள்  வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கடிதத்தில் விவசாய சமூகத்தினரிடம் இருந்து பெறப்பட்ட யோசனைகள் மற்றும் ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்ட ஆறு விடயங்கள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் எதிர்வரும் போகத்தில் கரிம மற்றும் இரசாயன உரங்களை 50% பயன்படுத்த அனுமதிப்பதும் உள்ளடங்கும்.

சேதன உர பாவனை தொடர்பான தீர்மானத்தினால் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் அநாதரவாகியுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்க சந்தர்ப்பம் கோரிய போதிலும் தமக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தனது நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெல்ஜியம் தீ விபத்தில் தமிழ் இளைஞன் பலி

Pagetamil

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சகோதரிகள் பலி

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

‘என்னை சேர் என அழைக்க வேண்டும்’: சைக்கோத்தனமாக நடந்த அர்ச்சுனா திங்கள் கைது?

Pagetamil

வெளிநாட்டு ஜோடியின் உயிரை காப்பாற்றிய பொலிசார்

Pagetamil

Leave a Comment