27.8 C
Jaffna
October 1, 2022
குற்றம்

கொக்குவிலில் பொலிசாரை கண்டதும் பின்பக்கமாக தப்பியோடிய நபர்: உள்ளேயிருந்த ‘சரக்கு’!

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் ஆட்கள் அற்ற வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சாவுடன் வீட்டிலிருந்த நபர் பொலிசாரை கண்டதும் தப்பியோடி விட்டார்.

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆட்கள் அற்ற அந்த வீட்டில் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

நேற்று இரவு பொலிசார் அந்த வீட்டுக்கு சென்ற போது, வீட்டிலிருந்தவர் பின்பக்கமாக தப்பியோடி விட்டார்.

பொலிசார் வீட்டை சோதனையிட்ட போது, 26 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அத்தியாவசிய சேவையாம்: பயணக் கட்டுப்பாட்டிற்குள் நடமாடும் கசிப்பு விற்பனை செய்த கில்லாடிகள் சிக்கினர்!

Pagetamil

பேஸ்புக்கில் காதல் வலைவிரித்த அன்ரி: யுவதியென நினைத்து இலட்சக்கணக்கில் பணத்தை கொடுத்த இளைஞன்!

Pagetamil

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பூநகரியில் சிக்கியது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!