கண்டி மாவட்டத்தின், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில், வீடொன்றுக்குள் புகுந்த ஆணொருவர், தீமூட்டியதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
காதல் முரண்பாட்டையடுத்து இந்த கொடூரம் நிகழ்ந்தது.
மெனிக்கும்புர தோட்டத்தில் வசித்து வந்த மேனகா என்ற யுவதி, காதல் தொடர்பை நிறுத்தியதையடுத்து, முன்னாள் காதலன் பாபு இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.
வீட்டுக்குள் புகுந்து கதவை தாளிட்டு, பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் பாபு, மேனகா, மேனகாவின் தந்தை உயிரிழந்தனர். தாயார் ராணியம்மா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றிய செய்தித் தொகுப்பே இது.