29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

ஜனாதிபதி கோட்டாபயவின் பேஸ்புக்கில் பிறர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், கருத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று இரவு முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட ஜனாதிபதி ராஜபக்ஷவின் முகநூல் பதிவுகளில் பயனர்கள் கருத்துக்களை வெளியிட முடியவில்லை.

“நான் 26 ஜனவரி 2010 முதல் எம்.பி.க்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்தேன். இதற்கு முன் யாரும் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் கருத்துகளை கட்டுப்படுத்தவில்லை. தனது சமூக ஊடக கணக்கில் கருத்துக்களை கட்டுப்படுத்திய இலங்கையின் முதல் அரசியல்வாதி/ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ஆவார்” சமூக ஊடக நிபுணர் கலாநிதி சஞ்சன ஹட்டொடுவ ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடியையடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளே அதற்கு காரணமென பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அந்த கருத்து எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பிறர் கருத்திடுவது தடுக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!