இலங்கை

செய்தித்தாள் பற்றாக்குறையால் இன்றைய பதிப்பை நிறுத்தியது த ஐலண்ட் பத்திரிகை!

செய்தித்தாள் பற்றாக்குறை இன்றைய (சனிக்கிழமை) பதிப்பை நிறுத்தியுள்ளது த ஐலண்ட் பத்திரிகை. செய்திகளை அச்சிடும் தாளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் வார இறுதி பதிப்பை நிறுத்துவதாக த ஐலண்ட் பத்திரிகை அறிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் இறுகிவருகிறது. இது பத்திரிகை துறையையும் விட்டு வைக்கவில்லை.

இது தொடர்பான அறிவிப்பு நேற்றைய செய்தித்தாளிலும், இன்றைய இணைய பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், ‘செய்தித்தாள் தட்டுப்பாடு காரணமாக சனிக்கிழமை பதிப்பை நாங்கள் நிறுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற தகவலை வாசகர்களிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிரோம். எனினும், திங்கள் முதல் வெள்ளி வரை வழக்கம் போல எமது பதிப்பு வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது கூட இந்த செய்தித்தாள் தடையின்றி அச்சானது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்பத்திரிகையின் ஆசிரியர் பிரபாத் சபந்து  அளித்த பேட்டியில், “கடந்த சில காலமாகவே நிறைய பத்திரிகைகள் மூடப்படும் நிலையை நோக்கி நகர்கின்றன. நியூஸ் ப்ரின்ட் மட்டுமே பிரச்சினையில்லை. ப்ரின்டிங் ப்ளேட், மை ஆகியனவற்றையும் கூட நாங்கள் இறக்குமதி செய்கிறோம். இப்போது பொருளாதார நெருக்கடியால் எல்லாமே குறைவாகவே கிடைக்கிறது. செய்தித்தாளின் பக்கங்களைக் குறைத்துள்ளோம். இதனால் விளம்பர வருமானமும் இல்லை. 1981ல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மட்டுமே நாங்கள் பிரதியை அச்சிடாமல் விடுமுறை விட்டிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் மொத்தமாகவே தாள் இல்லாமல் போய்விடும். அரசாங்க கோப்புகளை அச்சிடக் கூட தாள் இருக்காது” என்றார்.

இலங்கை தனக்கான நியூஸ் ப்ரின்ட்டை அவுஸ்திரேலியா, நோர்வே, இந்தோனேசியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பண மதிப்பு சரிவால் இறக்குமதிகள் கேள்விக்குறியாகியுள்ளன.

வீரகேசரி தமிழ் பத்திரிகையை அச்சிட்டுவந்த எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் கூறுகையில், “நாங்கள் 3 மாதங்களுக்கு முன்னாள் நியூஸ்ப்ரின்ட் ஓர்டர் செய்யும்போது அதன் விலை ஒரு தொன் 750 டொலர் என்றளவில் இருந்தது. இப்போது 1070 டொலராக அதிகரித்துள்ளது. இந்த விலையில் வாங்கினால் உற்பத்திச் செலவில் 70% தாள் வாங்கும் நிமித்தமாகவே சென்றுவிடும். இதனால் இந்தியாவிலிருந்து தாள் வாங்குகிறோம். ஆனால் அதன் தரம் சரியில்லை” என்றார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்.. முன்னதாக கடந்த வாரம் இலங்கையில் தாள் பற்றாக்குறையால் மேல் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆண்டிறுதி தவணைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!