முக்கியச் செய்திகள்

முன்னணியின் எதிர்ப்பினால் கந்தரோடை பயணத்தை கைவிட்ட மஹிந்த; நாவற்குழியில் குடியேற்றப்பட்டவர்களிற்கு காணி உறுதி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (19) யாழ்ப்பாணம் வந்தார். நாளை வரை அவர் யாழில் தங்கியிருப்பார்.

இன்று ‘தல யாத்திரை’களில் பிரதமர் ஈடுபட்டார். இதன்போது, பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு, பொதுமக்கள் சௌகரியத்திற்கு உள்ளாகினர்.

நயினாதீவு நாகவிகாரை, நாகபூசணி அம்மன் ஆலயம்,  யாழ் நாகவிகாரை, நாவற்குழி விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பிரதமரின் வருகைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்தைடுத்து, கந்தரோடை பௌத்த விகாரைக்கு செல்லும் பிரதமரின் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து காங்கேசன்துறையில் தங்குவதற்காக சென்ற பிரதமர், நாளை மட்டுவிலில் திறப்பு விழாவொன்றிலும், நல்லூர் ஆலய வழிபாட்டிலும் ஈடுபடுவார்.

பிரதமர் மஹிந்தவின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்திருந்தன.

பிரதமர் நயினாதீவை வந்தடைந்த போது, அவருடன் நெருக்கமாக செல்லும்உள்ளூர் பிரமுகர்கள் அன்டிஜன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்த பிரமுகர்கள் மட்டுமே பிரதமரை நெருங்க அனுமதிக்கப்பட்டன.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அன்டிஜன் சோதனைக்குள்ளாக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதியானது.

பிரதமரின் வருகைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தல் ஈடுபட்டனர். பின்னர், கந்தரோடையில் விகாரைக்கு அடிக்கல் நாட்டும் மஹிந்த ராஜபக்சவின் நிகழ்விற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபடுவார்கள் என தகவல் பரவியது.

இதையடுத்து, பிரதமரின் கந்தரோடை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

பிரதமர் யாழ் நகரிலுள்ள நாகவிகாரைக்கு வழிபாட்டிற்கு வந்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆரிய குளம் சந்தி பகுதியில் வீதித்தடைகள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமரின் வழிபாடுகள் முடியும் வரை நாக விகாரை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்களும் நாக விகாரைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன், நாவற்குழியில் அண்மையில் அமைக்கப்பட்ட விகாரையில் பிக்குகளின் தங்குமிட கட்டிடத்தையும் திறந்து வைத்தார். தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்பின் மத்தியில் அங்கு குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் 36 பேருக்கு காணி உறுதிகளையும் வழங்கி வைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கோப்பாய் சிகிச்சை மையத்திலிருந்து நேற்று வீடு திரும்பிய மூதாட்டி இன்று மரணம்: பருத்தித்துறையில் சம்பவம்!

Pagetamil

மனித உரிமை விவகாரத்தின் எதிரொலி: இலங்கைப் பொலிசாருக்கு வழங்கிய பயிற்சிகளை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து?

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பு- தமிழ் மக்கள் தேசிய கூட்டணியால் மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தமிழ் வடிவம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!