29.7 C
Jaffna
June 28, 2022
இலங்கை

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய ரௌடிக்குழு தலைவன் மடக்கிப் பிடிப்பு; தந்தையும் கைது!

யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடிக்குழு தலைவனான தனுரொக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய், லோட்டஸ் வீதியிலுள்ள வீட்டில் இன்று மாலை அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பின்னர் வீட்டில் நடத்திய சோதனையின் அடிப்படையில் தந்தையும் கைதானார்.

பத்மராஜா தனுசன் (30) என்பவர் தனு ரொக் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பிரபல ரௌடிக்குழு தலைவனாக இயங்கி வந்தார். ஆவா குழுவில் செயற்பட்ட பின்னர், அதிலிருந்து பிரிந்து தனுரொக் என்ற ரௌடிக்குழுவின் தலைவராக செயற்பட்டார்.

ஆவா குழுவும், தனு ரொக் குழுவும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்தனர்.

தனு ரொக்கை பொலிசார் தேடி வந்த போது, அவர் ரௌடிக்குழுவில் செயற்படுவதில்லை, கொழும்பில் படித்து வருகிறார் என பெற்றோர், பொலிசாருக்கு கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் தந்தை மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய ரௌடி ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனு ரொக்கே தன்னை ஏற்றி வந்ததாக தெரிவித்தார்.

தனு ரொக் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வாள் வெட்டில் ஈடுபடுவதை உறுதி செய்த பொலிசார், இன்று மடக்கிப் பிடித்தனர்.

இன்று தனது வீட்டில் தனு ரொக் தங்கியிருந்த போது, மானிப்பாய் பொலிசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்ட போது வாள் மீட்கப்பட்டது. இதனடிப்படையில், தனு ரொக்கின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

தரம் 1 மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம்

Pagetamil

மனிதக்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கையில் இலங்கை தொடர்ந்தும் கண்காணிப்பில்!

Pagetamil

மொரட்டுவ நகரசபைக்கு முன்பாக போராட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!