27.6 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

பாலமுனை முள்ளிமலைக்குள் மீண்டும் நுழைந்த பிக்குகள் குழு: இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்!

பாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த நிலையில் தகவலறிந்து அப்பகுதி வாழ் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை ஒன்று கூடியதனால் மீண்டும் திரும்பி சென்றனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென தெரிவித்து பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்கள் சிலரும் கடும் பாதுகாப்புடன் சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு தகவலறிந்து அங்கு சென்ற அப்பகுதி உள்ளுர் அரசியல் வாதிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தேரர் தலைமையிலான குழு திரும்பி சென்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை மீண்டும் தேரர் தலைமையில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குழு ஒன்று அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேரர்குழு வந்த தகவலை அடுத்து அவ்விடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்ஸில், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இதே வேளை இவ்விடயம் தொடர்பில் சுமூகமான பேச்சுவார்த்தையில் கடந்த மார்ச் 9 ஆம் திகதி புதன்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம் .ஏ .டக்லஸ் ஈடுபட்டிருந்தார். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாலமுனை முள்ளிமலை விவகாரம் சம்மந்தமாக பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மேற்குறித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளமிடப்பட்ட கல்வெட்டுக்களும் நடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment