ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து நீதிபதி விலகல்!

Date:

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட இன்று (10) விலகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை சரியாக மேற்கொள்ளவில்லையென குற்றம்சாட்டி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பி அறிக்கையின் அடிப்படையில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் ஷானி அபேசேகர ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (10) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து தாம் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட தெரிவித்தார்.

அதன்படி, மனு மீதான விசாரணையை நாளை மறுதினம் வரை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெரில் ரஞ்சன் லமஹேவா, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரன மற்றும் அதன் விசேட பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக டி சில்வா ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தம்மை கைது செய்யும் உத்தரவை பிறப்பிதறகு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு  ஷானி அபேசேகர நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்