கிழக்கு

அட்டாளைச்சேனையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி முறியடிப்பு!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் எடுத்த முயற்சியினால் இன்று அந்த பிரதேசத்தில் சிறிய பதட்டம் நிலவியது.

கடந்த சில நாட்களாக அங்கு வருகைதந்த சிங்கள இளைஞர்கள் சிலர் சிலை நிறுவும் ஏற்பாடுகளை செய்து வந்ததாகவும் இன்று காணிபூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதே இந்த முரண்பாட்டு நிலை தோன்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்தலத்திற்க்கு நேரடியாக வருகைதந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.அமானுல்லா, அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் அமைப்பினர், பிரதேச மக்கள் பலரும் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன் அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கும்பாபிஷேகத்தில் நிரம்பி வழிந்த ஆலய கிணறு: மட்டக்களப்பில் பக்தர்கள் பக்திப்பரவசம்!

Pagetamil

மாணவி மாயம்!

Pagetamil

அம்பாறையில் ஊருக்குள் புகுந்த யானைப்படை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!