வீட்டில் சமையவ் வேலைகளை செய்யாமல் நண்பர்களுடன் மது அருந்திய கணவனை,மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். கூரிய ஆயுதத்தால் கணவனின ஆணுறுப்பை குத்திக் காயப்படுத்தியுள்ளார்.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான புரிராம் பகுதியில் லஹான் சாய் மாவட்டம், தா சோங் துணை மாவட்டம், கிராமம் எண். 20 இல் கடந்த 3ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்தது.
வழக்கமாக மனைவி வேலை முடித்து வீடு திரும்பும் போது கணவர் சமையல் செய்து வைத்து விடுவார்.
சம்பவ தினத்தன்று, கணவர் சமையல் செய்யவில்லை. நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். மனைவி வந்ததும், கணவரின் நண்பர்கள் வெளியேறிச் சென்றனர்.
சமையல் வேலை செய்யாததால் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் உருவானது. இதன்போது ஆத்தரமடைந்த கணவர், மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அருகில் சுவருடன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த fishing harpoon (மீன்களை குத்திப் பிடிக்கு பயன்படுத்தப்படும் ஈட்டி போன்ற நீளமான கூரிய ஆயுதம்) ஒன்றை எடுத்து கணவரின் ஆணுறுப்பை குத்தியுள்ளார்.
fishing harpoonகளில் மீன்பிடிக்கும் போது, மீனை குத்தியதும், அதை திருகுவதுண்டு. கணவனின் ஆணுறுப்பை குத்திய பின்னர், ஒரு முறை திருகியுமுள்ளார்.
வலியால் கதறியழுத கணவன், தன்னை விட்டுவிடும்படி கதறிழுதுள்ளார்.
தற்போதும் தாயார் வீட்டிலேயே தங்கியுள்ளார். அங்கிருந்தபடியே ஊடகங்களை அழைத்து, ‘இந்த உலகத்தில் ஆண்களிற்கு நீதியே கிடையாதா? ஆண்களின் அடிமைத்தனம் எப்பொழுது உடையும்’ என்பதை போல, ஆதங்கங்களை கொட்டித் தீர்த்துள்ளார்.
மனைவியென்றாலே ‘குலை’ நடுங்குவதாகவும், அவரது கோபம் ஆறிய பின்னர் வீடு திரும்பலாமென திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.