ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் என்று நம்பப்படும் ஒருவரின் உல்லாசப் படகை இத்தாலி பறிமுதல் செய்துள்ளது.
இரும்புத் தொழில் அதிபர் அலெக்சீ மோர்டர்ஷோவ் என்பவரிற்கு சொந்தமானது அந்தப் படகு.
ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மீதும் அந்நாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மீதும் விதிக்கும் புதிய பொருளாதார தடைகளின் அடிப்படையில் அந்தப் படகு கைப்பற்றப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கும் பெரும் செல்வந்தர்களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த மாதம் 24ஆம் திகதி அன்று ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியது முதல் ரஷ்யச் செல்வந்தர்கள் பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
செல்வந்தர் மோர்டர்ஷோவ் போருக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏன் தம்மைக் குறிவைக்கிறது என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1