ஷேன் வோர்ன் தனது 52வது வயதில் தாய்லாந்தில் திடீரென மாரடைப்பால் காலமானார்.
ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது வியத்தகு சுழற்பந்துவீச்சின் மூலம் மகத்தான பல சாதனைகள படைத்தவர் ஷேன் வோர்ன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் வீரரான ஷேன் வோர்ன், 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வோர்ன், நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தார். தாய்லாந்தின், கோ சாமுய் ரிசார்ட்டில் உள்ள தனக்கு சொந்தமான வில்லாவில் இன்று காலை உயிரிழந்தார்.
ஷேன் வோர்ன் நேற்று தாய்லாந்து சென்றிருந்தார்.
கோ சாமுய்யில் உள்ள சொகுசு சமுஜானா வில்லாஸ் ரிசார்ட்டில் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
ஷேன் வோர்ன் தனது பந்துவீச்சுக்கு மட்டுமல்ல, பிளேபோய் அடையாளத்தாலும் புகழ் பெற்றார். பியர் மற்றும் சிகரெட்டுகளின் மீது அலாதியாக காதல் கொண்டிருந்தார்.
தனது சிறு பராய காதலியான சிமோனை மணந்தார்ஃ அவர்களிற்கு மூன்று பிள்ளைகள்.
அவரது மற்றொரு காதல் உறவு பகிரங்கமானதை தொடர்ந்து, 2010 இல் வோர்ன் – சிமோன் தம்பதியினர் பிரிந்தனர்.
அதன் பின்னர் 3 மொடல் அழகிகளுடன் அவர் டேட்டிங் செய்ததாக தகவல் வந்தது.