இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ள டீசல் 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது 22,000 மெற்றிக் தொன் டீசல் இருப்பதாகவும், டீசல் ஒரு தொகுதியை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் புதன்கிழமை (2) மாலை வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வழமைக்கு மாறாக மக்கள் அதிகளவு எரிபொருளை பயன்படுத்துவதால் நாட்டில் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5,000 மெற்றிக் தொன் டீசல் வெளியிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்தத் தொகை எதிர்காலத்தில் 3,000 மெட்ரிக் தொன்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கம்மன்பில கூறினார்.
ஊடகங்களுக்கு விசேட செவ்வி ஒன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியக் கடன் வசதிகள் காரணமாக எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்கள் மார்ச் இறுதி முதல் ஏப்ரல் இறுதி வரை கிடைக்கும் என்பதால் சிறிது கால அவகாசம் இருக்கும். ஒரு வருடத்திற்குள் கடனை அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் முன் வந்து எரிபொருள் இறக்குமதிக்கு நிவாரணம் வழங்கினால் அல்லது எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்காவிட்டால் வங்கிகளில் கடன் பெற முடியாவிட்டால் எதிர்காலத்தில் எண்ணெய் இறக்குமதியை எவ்வாறு தொடர முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கெல்லாம் மூல காரணம் டொலர் தட்டுப்பாடும், கடன் வசதிகளை எடுப்பதும், தேவையற்ற இறக்குமதியை கட்டுப்படுத்துவதும் தான் என்று கூறிய அமைச்சர், குடிநீர், அப்பிள், திராட்சை போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.