27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

Russia-Ukraine crisis: 6ஆம் நாள்: உக்ரைனிலிருந்து தப்பிச்செல்ல அந்தரிக்கும் மக்கள்!

உக்ரைனில் இருந்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் அகதிகளாக வௌியேறியுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு (UNHCR) மதிப்பிட்டுள்ளது.

உக்ரைனிலுள்ள UNHCR பிரதிநிதி கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங் இதனை தெரிவித்தார்.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தி மாநாட்டில் கரோலினா லிண்ட்ஹோம் பில்லிங் கூறுகையில், “ஒரு மில்லியன் மக்கள் உள்நாட்டில் இருந்து தப்பியோடியவர்கள் அல்லது தற்போது ரயில், பேருந்து அல்லது காரில் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். இன்னும் நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உக்ரைனிலிருந்த தப்பிச்செல்ல தொடர்ந்து பொதுமக்கள் முயன்று வருகிறார்கள். எனினும், மக்கள் வெளியேறுவதை உக்ரைன் இராணுவம் தடுத்து வருகிறது.

தலைநகர் கீவிலிருந்து தப்பிச் செல்ல மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த ரயிலில் மக்கள் தப்பிச் செல்ல அந்தரிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த த கார்டியன் செய்தித்தாளின் நிருபர் ஷான் வாக்கர், அங்குள்ள மனிதாபிமான நெருக்கடியை “தாங்க முடியாதது” என்று விவரித்தார்.

“முதியவர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், செல்லப்பிராணிகள், இந்த ரயில் ஏற்கனவே நிரம்பியுள்ளது,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“இது தப்பி ஓடுவதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.”

மிகப்பெரிய ரஷ்ய இராணுவத் தொடரணி தற்போது தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பது, அங்குள்ள மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

உக்ரைனிலிருந்து அதிகமான மக்கள் போலந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

போலந்துக்குள் நுழையும் உக்ரையிய எல்லைச்சாவடியுள்ள ரவா ருஸ்காவில் ஏராளமாக மக்களும் வாகனங்களும் குவிந்துள்ளன.


உக்ரைன் மீது ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரு தரப்பும் இன்று முதன்முதலாக கைதிகள் பரிமாற்றத்தில் ஈடுபட்டன.

சுமி ஒப்லாஸ்டில் இந்த கைதிகள் பரிமாற்றம் நடந்ததாக சுமி பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவரான டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி டெலிகிராமில் எழுதினார்.

உக்ரைன் கைது செய்த ரஷ்யாவின் இராணுவ அதிகாரியொருவவர ஒப்படைத்தது. ரஷ்யா கைது செய்த 5 உக்ரைனிய சிப்பாய்களை ஒப்படைத்தது.


“எங்களுடன் நீங்கள் துணை நிற்பதை நிரூபியுங்கள்”: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஆவேச உரை!

“உங்களுடன் சமமாக உயிர் வாழ்வதற்காக, எங்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்களும் உங்களைப் போல தான் இருக்கிறோம்” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவ நடவடிக்கை 6வது நாளாக தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்தினார்.

(முழுமையான செய்திக்கு)


ரஷ்யப் படைகள் ‘கெர்சன் நகரைச் சூழ்ந்துள்ளன’

ரஷ்ய துருப்புக்கள் தெற்கு உக்ரேனிய நகரமானகெர்சனை சுற்றி வளைத்துள்ளன.

“நகரம் உண்மையில் சூழப்பட்டுள்ளது, எல்லா பக்கங்களிலும் நிறைய ரஷ்ய வீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் உள்ளன, அவர்கள் வெளியேறும் இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்” என்று பத்திரிகையாளர் அலியோனா பானினா உக்ரேனிய 24 தொலைக்காட்சி சனலுக்கு தெரிவித்தார்.

நகரின் மேயர் இகோர் கோலிகாயேவ் பேஸ்புக்கில், “கெர்சனின் நுழைவாயில்களில் ரஷ்ய இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைக்கிறது” என்று கூறினார்.

கெர்சன் நகரத்தின் மக்கள்தொகை சுமார் 280,000 மற்றும் கிரிமியா தீபகற்பத்தின் வடக்கே உள்ளது.


ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை ஜப்பான் முடக்குகிறது

ஜப்பான் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதில் நாட்டின் தலைவர்கள் மற்றும் மூன்று நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம் அடங்கும். ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உட்பட ஆறு நபர்களின் சொத்துக்கள் தவிர, ஷ்யா அரசுக்கு சொந்தமான Promsvyaz bank மற்றும் Vnesheconom bank மற்றும் நாட்டின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கும்.


ரஷ்ய தாக்குதலில் 70 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டனர்

கிழக்கு உக்ரைனில் கார்கிவ் அருகே உள்ள இராணுவ தளத்தை ரஷ்யப் படைகள் குறிவைத்து தாக்கியதில், குறைந்தது 70 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் படையினர் ஒரு இடத்தில்திகளவில் கொல்லப்பட்ட சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

திங்கட்கிழமை பிற்பகல் ரஷ்ய பீரங்கிகள் ரஷ்யாவின் எல்லையில் இருந்து 49 கிலோமீட்டர் (30 மைல்) மற்றும் கார்கிவ் நகருக்கு வடமேற்கே 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரமான ஓக்திர்காவில் உள்ள இராணுவ தளத்தை தாக்கின.

“இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்படுகின்றன” என்று சுமி பிராந்திய நிர்வாகத்தின் தலைவரான டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி செவ்வாயன்று காலை கூறினார்.


உக்ரைன் மீது மிகப்பெரியளவில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தப் போகிறது என ஊகிக்க முடிகிறது.

தலைநகர் கீவ் நோக்கி ரஷ்ய இராணுவத்தின் மிகப்பெரிய இராணுவத் தொடரணி நகர்ந்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Maxar Technologies நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, உக்ரைனின் தலைநகரிற்கு ரஷ்ய இராணுவத் தொடரணி வந்தடைந்துள்ளது.சுமார் 40 மைல்கள் (64 கிமீ) வரை நீளமான இந்த தொடரணியில், நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், டாங்கிகள், இழுத்துச் செல்லப்பட்ட பீரங்கி மற்றும் தளவாட ஆதரவு வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது” என்று அமெரிக்க செயற்கைக்கோள்-இமேஜிங் நிறுவனம் கூறியது.

நேற்று, உக்ரைனின் அன்டோனோவ் விமான நிலையத்திற்கு கிழக்கே, இந்த தொடரணி புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யா வெற்றிட குண்டை பயன்படுத்தியதாக உக்ரைன் கூறுகிறது

திங்களன்று உக்ரைனில் ரஷ்யா வெற்றிட குண்டைப் (vacuum bomb) பயன்படுத்தியதாக அமெரிக்காவுக்கான உக்ரைனின் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா கூறுகிறார்.

தெர்மோபரிக் வெடிகுண்டு என்றும் அறியப்படும், இந்த ஆயுதம் சுற்றியுள்ள காற்றில் இருந்து ஒட்சிசனைப் பயன்படுத்தி உயர் வெப்பநிலை வெடிப்பை உருவாக்குகிறது, பொதுவாக வழக்கமான வெடிபொருளை விட குறிப்பிடத்தக்க நீண்ட கால வெடிப்பு அலையை உருவாக்குகிறது.

“அவர்கள் இன்று வெற்றிட குண்டைப் பயன்படுத்தினார்கள், இது உண்மையில் ஜெனீவா மாநாட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது” என்று அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு மார்க்கரோவா கூறினார்.

“ரஷ்யா உக்ரைனில் ஏற்படுத்த முயற்சிக்கும் பேரழிவு மிகப்பெரியது.”என்றார்.


அனைத்து உலகளாவிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ரஷ்யாவை தடை செய்ய ஜெலென்ஸ்கி கோருகிறார்.

உக்ரைன் ஜனாதிபதி, தனது நாட்டைத் தாக்கியதற்கு தண்டனையாக ரஷ்ய விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு உலகளாவிய தடை விதிக்க கோரியுள்ளார்.

“அனைத்து துறைமுகங்கள், அனைத்து கால்வாய்கள் மற்றும் உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் ரஷ்யாவிற்கான நுழைவை நாங்கள் மூட வேண்டும்” என்று ஜெலன்ஸ்கி பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்ய ரொக்கட்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு வானத்தை முழுமையாக மூடுவதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.


ஸ்டார்லிங்க் கருவி வந்துவிட்டதாக உக்ரைன் கூறுகிறது

ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைப் பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் தனது நாட்டிற்கு வந்துவிட்டதாக உக்ரைனின் டிஜிட்டல் அமைச்சர் கூறுகிறார்.

மைக்கைலோ ஃபெடோரோவ் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்குக்கு திங்கள்கிழமை ஒரு ட்விட்டர் இடுகையில் நன்றி தெரிவித்தார்.

அது ஒரு டிரக்கின் பின்புறத்தில் உள்ள பெட்டிகளின் புகைப்படத்துடன் இருந்தது.

Starlink என்பது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய அமைப்பாகும், இது உலகின் பின்தங்கிய பகுதிகளுக்கு இணைய அணுகலைக் கொண்டுவருவதற்காக SpaceX பல ஆண்டுகளாக உருவாக்கி வருகிறது. இணையச் சேவை நம்பகத்தன்மையற்ற அல்லது கிடைக்காத பகுதிகளுக்கு “மிகப் பொருத்தமானது” என்று தன்னை சந்தைப்படுத்துகிறது.


கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள இரண்டு நகரங்களின் மேயர்கள்,  ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பிற்கு உதவி வழங்கி, ஒத்துழைத்த தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைனின் உள்நாட்டு உளவுத்துறை நிறுவனமான உக்ரைனின் பாதுகாப்பு சேவை, டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், ரஷ்யாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்குப் பகுதியில் உள்ள குப்யான்ஸ்க் மாவட்டத் தலைநகர் மேயர் நகரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்ததாகச் சந்தேகிப்பதாக தேரிவித்துள்ளது.

குப்யான்ஸ்க் பிராந்தியத்தின் வடகிழக்கு பகுதியில் ஒரு முக்கியமான இரயில் பாதை சந்திப்பு உள்ளது. அந்த நகர மேயர் ஹென்னாடி மாட்செஹோர் 2020 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி பிளாக்-ஃபார் லைஃப் என்ற ரஷ்ய சார்பு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப்ரவரி 27 அன்று, மேயர் ரஷ்யாவின் இராணுவக் கட்டளையை அணுகி, பல ரஷ்யப் படைகளின் இராணுவ வீரர்களுக்கு வீடு, எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார் என குற்றம்சாட்டிள்ளது.

கார்கிவ் பிராந்தியத்தின் Pivdenniy மேயர் Oleksandr Briukhanov பிப்ரவரி 28 அன்று தடுத்து வைக்கப்பட்டார்.

கார்கிவ் கவர்னர் ஓலே சின்யெஹுபோவ் வெளியிட்ட தகவலில், நகர மேயர், துணை மேயர், உள்ளூர் பிராந்திய காவல் துறையின் தலைவர் மற்றும் மாவட்ட ஆய்வாளர் ஆகியோர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

“எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கும் நபர்களின் புரிதலுக்காக இதை தெரிவிக்கிறோம். உள்ளது. எங்கள் நிலத்தில் ஒரு அங்குலத்தை விட்டுக்கொடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

2014 இல் ரஷ்யா ஆரம்பத்தில் உக்ரைனின் கிரிமியன் தீபகற்பம் மற்றும் டான்பாஸ் பிரதேசங்களை ஆக்கிரமித்தபோது, ​​​​அந்த பகுதிகளில் உள்ள இராணுவம், அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள பல பணியாளர்கள் ரஷ்யபாவின் பக்கத்திற்கு மாறினர். இது உக்ரைனின் நிலப்பரப்பில் 7.2 சதவீதத்தை ரஷ்யாவால் விரைவாக ஆக்கிரமிக்க முடிந்தது.


ஐ.நாவிற்கான12 ரஷ்ய ஊழியர்களை அமெரிக்கா வெளியேற்றியது

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதரகத்தின் 12 உறுப்பினர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

“அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த இராஜதந்திரிகள் இராஜதந்திரிகளாக தங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளுக்கு இணங்காத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று துணை அமெரிக்க தூதர் ரிச்சர்ட் மில்ஸ் ஐ.நா பாதுகாப்பு சபையில் தெரிவித்தார்.

எனினும், மேலதிகமாக எதையும் தெரிவிக்கவில்லை.


ரஷ்யா மற்றும் உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தங்கள் நாடுகளிற்கு திரும்பி ஆலோசனையில் ஈடுபட்டபின்,  புதிய பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த கட்ட திட்டத்தை அறிவிப்பார்கள்.

 ரஷ்யா உக்ரைனின் மீது போர் தொடுத்த பின்னர் நேற்று நடந்த முதல் பேச்சுவார்த்தைக்கு பின்னர், தூதுக்குழுக்கள் ஆலோசனைக்காக தங்கள் தலைநகரங்களுக்குத் திரும்பி வருகின்றன, விரைவில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து விவாதித்துள்ளனர் என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கேலோ போடோலியாக் கூறினார்.

ரஷ்ய தூதுக்குழு தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில், “பேச்சுவார்த்தைகளை தொடர நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்றார்.


உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனுக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்குபவர்கள், இந்த ஆயுதங்கள் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டால் பொறுப்பேற்க வேண்டும். ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் கடுமையான பதிலடி இல்லாமல் விடப்படாது என்று  கூறியது.


கருங்கடலுக்கான நுழைவாயிலை கட்டுப்படுத்தப் போவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் “நெருக்கடி” மேலும் தீவிரமடைவதைத் தடுக்க 1936 மாண்ட்ரீக்ஸ் உடன்படிக்கையின் கீழ் துருக்கிய ஜலசந்தி மீது துருக்கி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்று ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

மாநாட்டின்படி, போர் நடக்கும் போது டார்டனெல்லஸ் மற்றும் பொஸ்பரஸ் வழியாக வெளிநாட்டு போர்க்கப்பல்கள் செல்வதை துருக்கி நிறுத்தலாம்.

உக்ரைன் துருக்கியை இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், ரஷ்ய போர்க்கப்பல்களை அணுக தடை விதிக்கவும் கேட்டுக் கொண்டது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எர்டோகன் விமர்சித்தார், ஆனால் மாஸ்கோ அல்லது கீவ் உடனான உறவுகளை தனது நாடு “விட்டுக்கொடுக்காது” என்றும் கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

Leave a Comment