அட்ஜஸ்ட் பண்ணாததால் தனக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்று இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் இஷா கோபிகர். விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.
வைத்தியக் குடும்பத்தை சேர்ந்த இஷா, பொக்கட் மணிக்காக மொடலிங் செய்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார்.
திரையுலகம் பற்றி இஷா கூறியிருப்பதாவது,
திரையுலகில் கேம்புகள், நெபடிசம் இருக்கிறது. 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் பெரிய படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் முன்னாள் ஹீரோயின் ஒருவர் சில போன் கோல்கள் செய்ய, அவரின் மகளுக்கு அந்த படம் கிடைத்து விட்டது.
என் உதவியாளர்கள் இல்லாமல் தனியாக வரச் சொன்னார். உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து, என் திறமைக்காக மட்டுமே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றேன். உடனே என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
நான் காம்பிரமைஸ் செய்யாததால் சிறு கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது என்றார்.