26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இந்தியா

மணமேடையில் விபரீதம்: மாலை மாற்றும்போது கழன்று விழுந்த விக்; வழுக்கை தலையை கண்டதும் மயங்கி விழுந்த மணப்பெண்!

இந்தியாவின், உத்தரபிரதேசத்தில் ஒரு பெண், திருமண நாளில் மணமகன் விக் அணிந்திருப்பதைக் கண்டு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

உ.பி மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

2019 ஆம் ஆண்டு வெளியான ஆயுஷ்மான் குரானாவின் ‘பாலா’ திரைப்படத்திலும் இதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இளவயதில் வழுக்கை தலையால் அவதிப்படும் ஒருவரின் கதை அது.

கடந்த புதன்கிழமை இரவு எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா பகுதியில் திருமணம் நடந்தது.

மணமகன் அஜய்குமாருக்கு வழுக்கை தலை. அவர் அதை மறைத்து திருமணம் செய்தார். திருமணத்தின் போது, வழுக்கை தலையை மறைக்க விக் பயன்படுத்தியுள்ளார்.

மாலை மாற்றும் சடங்கு நடந்து கொண்டிருந்த போது, ​​மணமகன் அஜய் குமார் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதையும், தனது பாரம்பரிய தலைக்கவசத்தை பலமுறை சரி செய்து கொண்டிருப்பதையும் மணமகள் கவனித்தார்.இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதை அவதானித்துக் கொண்டிருந்த மணப்பெண்ணின் உறவினர் ஒருவர், அஜய் விக் அணிந்திருப்பதை கண்டறிந்து விட்டார்.

மீண்டுமொரு முறை மாலை மாற்றும் போது, மணமகன் எதிர்பாராத தருணத்தில், எதேச்சையான நிகழ்வை போல தலைப்பாகையை தட்டியுள்ளார்.

விக்குடன் சேர்ந்து தலைப்பாகை கழன்று விழுந்துள்ளது. அஜய் வழுக்கை தலையுடையவர் என்பது தெரிய வந்தது.

இதை பார்த்த மணமகள், மண மேடையிலேயே மயங்கி விழுந்து விட்டார்.

பின்னர், சுயநினைவு திரும்பியபோது, ​​மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை.

மணமகன் அஜய்குமார் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மன்னிக்கவும்… நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை!” – விஜய் பேச்சுக்கு உதயநிதி ரியாக்‌ஷன்

Pagetamil

“ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது” – திமுக மீது விஜய் கடும் தாக்கு

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

புதிய காதலியுடன் திருமணம்; லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டியெறிந்த இறைச்சிக்கடைக்காரன்!

Pagetamil

Leave a Comment