குற்றம்

18 வருடங்களாக பெண்களை வைத்து விபச்சாரம் செய்தவர் கைது!

18 வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களைப் பயன்படுத்தி விபச்சார வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக ஒன்லைனில் விற்றதற்காக சந்தேகநபர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சிறுமியை விபச்சாரத்திற்கு விற்று பணம் சம்பாதித்ததாகவும், மோசடிக்கு உதவியதாகவும் தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. சந்தேகநபர் சிறுமியை விற்று பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அவரது தாயாரையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு நிரந்தர வேலையோ அல்லது நிரந்தர வதிவிடமோ இல்லை எனவும், சுமார் 18 வருடங்களாக பெண்கள் மற்றும் சிறுமிகளை பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தி வந்தவர் எனவும் விசாரணைகளை அடுத்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் 8 வங்கிக் கணக்குகளில் ரூ. 45.6 மில்லியன் (ரூ.45,681,905) பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.

மேலும், கண்டி மற்றும் கம்பஹா பிரதேசங்களில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பில்  இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி நடமாடும் விபச்சார விடுதிகளை நடத்தி வந்தார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் சந்தேக நபரை வாதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய பின்னர் மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டாயமாக கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க ரூ.1000 கொடுத்தவர் கைது!

Pagetamil

மோசடியில் ஈடுபட்ட அழகுக்கலைஞர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil

நெல்லியடியில் கஞ்சா பொதியை கைமாற்ற காத்திருந்த இளைஞன் கைது!

Pagetamil

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவு!

Pagetamil

யாழில் ஒரு மாத காதலியுடன் தியேட்டருக்கு சென்ற காதலனுக்கு ஏற்பட்ட கதி: இரண்டு யுவதிகளை தேடும் பொலிசார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!