29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஆளுனரின் வாக்குறுதியை ஏற்க மறுத்து போராட்டம்!

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் இரண்டாவது நாளாக ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் அவர்களை சந்தித்த உறவினர்கள் வடமாகாண ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தெரிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில் எமக்கு நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டோம் என கைதிகள் தெரிவித்ததையடுத்து உறவினர்களும் அவர்களுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் நேற்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று தனது அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தொடர்பு கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

இந்நிலையில் ஆளுநரின் வாக்குறுதியை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு தெரிவித்த போது அதனை ஏற்க மறுத்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்ததையடுத்தே அரசியல் கைதிகளின் உறவுகளும் மீண்டும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment