Site icon Pagetamil

அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவும், இன்று அதிகாலையும் அத்துமீறி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய ரோலர் படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

ஒரு படகில் 9 பேரும், மற்றொரு படகில் 13 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

படகுகளும், மீனவர்களும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Exit mobile version