உக்ரைன் வான்வெளியில் பறப்பில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என விமான நிறுவனங்களிடம், மோதல் மண்டல கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் எதிர்பாராத துப்பாக்கிச் சூடு அல்லது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதால், உக்ரைனின் எந்தப் பகுதியிலும் விமான நிறுவனங்கள் பறப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
2014 இல் கிழக்கு உக்ரைனில் MH17 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு மற்றும் மோதல் மண்டல தகவல்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, புதிய அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா வான்வெளியை ஓரளவு மூடியுள்ளது.
உக்ரைனுடனான தனது எல்லைக்கு கிழக்கே உள்ள ரோஸ்டோவ் பகுதியில் ரஷ்யா வான்வெளியை மூடியுள்ளது.