30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 3 பேர் யாழ் சிறையில் உண்ணாவிரதம்: ஆளுனர் அலுவலகத்தின் முன் உறவினர்கள் உண்ணாவிரதம்!

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், நல்லதம்பி நகுலேஸ்வரி மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோர் கடந்த 2020 ஜூலை மாதம் 3 மற்றும் 6 ஆம் திகதிகளிலும், 2021 மே மாதம் 28 ஆம் திகதியிலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உண்ணாவிரதம் இருக்கும் சிறைக் கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகிறனர்.

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment