28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

50 பேர் பங்குபற்றிய ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்க 100 பாதுகாப்பு தரப்பினர்!

அரசியல்வாதிகளின் அற்ப அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற பாதுகாப்புப் பிரிவுகளை பயன்படுத்த வேண்டாம் என்று கத்தோலிக்க அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் திலின அழககோன் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்களிடம் இருக்கும் மரியாதை குறைந்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கோரி 50 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 100 புலனாய்வு மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 50 பேர் கொண்டதாக குறிப்பிட்டார்.

நீதி கேட்டு சிவில் ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அதிகாரிகள் பயப்படுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்புப் படையினரை மதிக்கும் அதே வேளையில், அவர்கள் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவே நிலைநிறுத்தப்பட்டதாகவும் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அரசியல்வாதிகளின் தேவைகளிற்காக அவர்கள் ஈடுபடுத்தப்படுவது கவலைக்குரியது என்று அழககோன் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment