27.5 C
Jaffna
August 7, 2022
கட்டுரை

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கும், சர்வதேச காய் நகர்த்தல்களும்!

-கோவை நந்தன்-

ப்படி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைகால  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றனவோ அதனைப் போன்றே மாறுபட்ட 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் குளிர்கால ஒலிம்பிக்கின் 24வது போட்டிகள், சில  நாடுகளின் பங்கு பற்றுதல் இன்றி  சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குருவிக் கூடு (BIRD’S NEST) மைதானத்தில் கடந்த 4ம் திகதி (04/02/2022) இடம்பெற்ற சம்பிராதய பூர்வ நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெய்ஜிங்(Beijing)நகரின்  BIRD’S NEST மைதானம் மற்றும் அங்குள்ள ,யாங்கிங் (Yanqing),ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முற்றிலும் பனி கட்டிகளால் ஆன சிறப்பு மைதானங்களில் இடம் பெறும் இந்த குளிர்கால போட்டிகள் கண்களுக்கும், மனதுக்கும் இதம் அளித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது,

இந்த மாதம் 20-ம் தேதி வரை (20/02/2020) நடைபெறவுள்ள இந்த போட்டிகளை நடாத்தி முடிப்பதன் மூலம்,2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கோடை கால ஒலபிக்ஸ் மற்றும் தற்போதைய குளிர்கால ஒலிம்பிக்ஸ் இரண்டையும் வெற்றியுடன் நடாத்தி முடித்த பெருமையை சீனாவின் பெய்ஜிங் நகர் பெறுகிறது.

109 தங்க.வெள்ளி,வெண்கல பதக்கங்களுக்காக நடை பெறும் இப்போட்டிகளை நடத்துவதற்காக நோர்வே  தலைநகர்  ஓஸ்லோ, கஜகஸ்தானின் அல்மாட்டிநகர் ,மற்றும் சீனத் தலைநகர் பெய்ஜிங் ஆகியவற்றிற்கு இடையே கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் இடம் பெற்ற போட்டியில் பலத்த எதிர்ப்புகளின் மத்தியில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப் படுகிறார்கள் என்கின்ற ஏகாதிபத்திய நாயகன் அமெரிக்காவின்  குற்றச்சாட்டை ஆதாரங்கள் எதுவும் அற்று ஏற்றுக்கொண்ட அதன  ஆதரவு நாடுகளும்,அமெரிக்காவுடன் இணைந்து  மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவில் இடம்பெறும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக அறிவித்து அதனை செயல்ப்படுத்தியுள்ளன. இந்த ரீதியல் முதலில்  அமெரிக்காவும் அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து,கனடா மற்றும் பிரிட்டன், இறுதியாக பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும்,இந்த 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தமது விளையாட்டு வீரர்களையும் அவர்களது நிர்வாக அதிகாரிகளையும்  மட்டுமே அனுப்புவோம் என அறிவித்து ஒலிம்பிக் போட்டிகளை வெளியுறவு ரீதியாகப் புறக்கணித்துள்ளன.

இந்தியாவின் லடாக் மாநிலத்தின் இமய மலைப் பகுதியில் சீன,இந்திய  இராணுவத்தினருக்கு இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றில் முன்னிலை வகித்த சீன இராணுவ  அதிகாரி ஒருவரே இந்த போட்டிகளின் ஒலிம்பிக் தீபத்தை சீனாவினுள் எடுத்து சென்றதால் நாமும் பெய்ஜிங் நிகழ்வுகளை பகிஸ்கரிக்கிறோம் என்று தெரிவித்து இந்தியாவும் இராஜ தந்திர புறக் கணிப்பை மேற்கொண்டுள்ளது..

இந்நிலையில்,தங்கள் மீது வீணாக பழிபோட்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் அரசியல் நடாத்தும் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளி நாடுகளினதும்  தந்திரத்தை  கண்டித்துள்ள சீன அதிபர் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள், அமெரிக்காவை நம்பி தமது நாட்டு மக்களுக்கு  தாமே துரோகம் இழைக்கின்றன என்று கவலையுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது போன்ற பல இராஜதந்திர சிக்கல்கள், தொடரும் கோவிட் பெரும் தொற்று  என்பவறிற்கு மத்தியில் ஆரம்பிக்கப் பட்டுள்ள  இந்த குளிர்கால ஒலம்பிக் போட்டிகளின்  தொடக்க விழா,வழமைக்கு மாறாக மிகவும் அடக்கமாகவும் அதேசமயம் வழமை போல மிகவும் சிறப்பாகவும் நடாத்தப்பட்டது.1970 களில் இடம்பெற்ற சீன கலாச்சாரப் புரட்சியின் போது அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில், ஆரம்ப நிகழ்வுகள் அமைந்திருந்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்திருந்தனர்.

செஞ்சீனத்தின் தலைவர் மாவோவை நினைவு படுத்திய “சிறிய சூரியகாந்திகள்” என்கிற  குழந்தைகள் நடனமும் அந்த நடன அரங்கின் அழகியல் அமைப்பும் பார்வையாளர்களின் சிறப்புக் கவனத்தை ஈர்ந்தது.சீனாவின் மக்கள் இராணுவத்தை  (Peoples Liberation Army) சேர்ந்த வீரர்கள்,அணிவகுத்துச் சென்று   சீனாவின் தேசியக் கொடியை அதிகார பூர்வமாக ஏற்றி வைக்க எண்ணிலடங்கா ஒத்திசைக்கப்பட்ட வெகுஜன நிகழ்ச்சிகள் அரங்கத்தை அதிரவைத்தன.

இளம் பெண்களின் பாம்-பாம்ஸ் குலுக்கல் (Shaking Pom-Poms)நடனம் மற்றும் இளம் பையன்களின் லைட்சேபர்களைப் (Wielding Light Sabers) பயன்படுத்தி,உருவாக்கப்பட்ட மின்னணு மலர்களின் (electronic flowers)  இருள் நடனம் என்பன  கலை அழகுக்கு மேலும் மெருகூட்டின.. .

சீன அதிபர் ஜி ஜின்பிங்,கோவிட்-19 முகமூடியுடன்  முழு நீள நீல நிற பர்கா (Blue Parka) உடையில் உயர்மட்டத்தில் இருந்து ஆரம்ப நிகழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்தத்துடன் கலை நிகழ்சிகளை ரசித்துக் கொண்டிருந்த காட்சி  சீனப் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி இருக்கலாம் .

ஆனால் மாவோ சேதுங்கிற்குப் போட்டியாக ஆளுமை மிக்கதலைவராக தன்னை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற அவரது எண்ண வெழிபாட்டு முறைமையானது, அவரது கவர்ச்சி, ஆளுமை என்பவற்றின் குறைபாட்டால் (Non Charismatic) மக்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அரங்கிலும் பின் நோக்கியே நகர்கிறது என்கின்றனர் மேற்குலக ஆய்வாளர்கள்

இந்த எண்ணக் கருவை முறியடித்து தன்னை ஒரு ஆளுமை மிக்க தலைவராக(Charismatic Leader) உலகிற்கு காட்டிக் கொள்ளும் முன்னெடுப்புகளில் ஒன்றே,ஷி ஜின்பிங் அவர்களின் இந்த ஒலிம்பிக்  போட்டிகளை தனது தலைமையில் நடாத்த எடுக்கப்பட்ட பிரயத்தனமும்,ஆரம்ப விழாவின் நவீன ஆடம்பரங்களும் என்கின்ற விமர்சனங்களும் உண்டு.

“ஒரே உலகம் ஒரே குடும்பம்” (One belt One road) என்கிற சீன கொமியூனிஸ்ட் கட்சியின்(CCP) கருப்பொருளைச் சுற்றியே ஆரம்ப விழா நிகழ்வுகள் அமைக்கப் பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

சீனா உட்பட பல நாடுகள் துண்டிக்கப்படும் சவாலை எதிர்கொள்ளும் நிலையில்  அமெரிக்காவின் உலகமயமாக்கலையே ஒத்த சீனாவின் ஒரே நாடு ஒரே குடும்பம் என்கிற (One belt One road) முன்னெடுப்பு சாத்தியமாகுமா…? வெற்றியளிக்குமா,,,? என்பது கேளிக்குகுறியே.

சீனாவின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலக அரங்கில் வெளிப்படுத்த விரும்பும்,அதிபர் ஜின்பிங்கின் முயற்சிகளுக்கு மத்தியில்தான் தைவானிலிருந்து இந்திய எல்லை வரையிலும், ஹொங்கொங் முதல் சீனாவின் சின்ஜியாங் வரையிலும் அவரது போர்க்குணமிக்க தூண்டுதல்களின் எண்ணற்ற அளவிலான அடையாளங்கள் வெளிப்படுத்தப் படுகின்றன என அமெரிக்க உளவு அமைப்பான (CIA) தரப்பில் குற்றம் சாட்டப் பட்டிருந்தது.

சீனாவில் 2008இல் இடம்பெற்ற  கோடைகால ஓலம்பிச்கின் தொடக்க விழாவைப் போலவே, இந்த நிகழ்சிகளுக்கும் பிரபல சீன திரைப்பட இயக்குனர் ஜாங் யிமோ(Zhang Yimou) அவர்களே  மீண்டும் கலை இயக்குநராக இருந்து கலை நிகழ்சிகளை சிறப்புற வடிவமைத்திருந்தமை நிகழ்சிகளுக்கு மேலும் மெருகூட்டியது. சீன திரைப்பட உலகின் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர்,நடிகர் என பல்துறை ஆளுமையாளரான இவர் 1994 இல் தனக்கு கிடைத்த கான் சர்வதேச திரைப்பட விருதை அந்தவிருதுக்கான  தெரிவுகளில்  ஊடுருவும் மேற்குலகின் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆரம்ப நிகழ்சிகளின் போது இடம்பெற்ற சர்வதேச அணிகளின் அணிவகுப்பில், தாய்வான் அணி “சீன தைபே” என்கிற பெயரில், கொங்கொங்கிற்கு அடுத்ததாக செல்ல வேண்டும் என பெய்ஜிங்கால் வலியுறுத்தப்பட்டதாகவும்,இது வழமைக்கு மாறான செயல் எனவும்  மேற்க்கத்தைய ஊடகங்கள் கண்டனம் வெளியிட்டு சீனாவிற்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த .முயற்சிப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய மக்கள் வாழும் சீனாவின் மேற்கு மாகாணமான சின்ஜியாங்கின் உய்கர்(Uyghur) இன பெண் வீராங்கனை ஒருவரும் சீன வீரர் ஒருவரும் இணைந்து 24வது குளிர்கால ஒலிம்பிக்கின் இறுதிச்  சுடரை ஏற்றி போட்டிகளை ஆரம்பித்து வைத்தமையானது சிறுபான்மை இன மக்கள் சீன அரசால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற அமெரிக்காவின் பிரசாரத்தை மழுங்கடிப்பதாய் அமைந்திருந்தது.

இந்த 24வது குளிர்கால ஒலிம்பிக்கை “இனப்படுகொலை விளையாட்டுகள்” என்று ஏளனமாக வர்ணித்திருந்த அமெரிக்கா உட்பட்ட அனைவருக்கும் உய்கர்(Uyghur) இன பெண் வீராங்கனை ஒருவருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும்,சீனாவின் ஏனைய 4 சிறுபான்மை இன போட்டியார்கள் தேர்வுசெய்யப்பட்ட முறைமையும்  ஒரு தெளிவான கண்டனத்தை வெளியிடுவதாக அமைந்திருந்தது.

அமெரிக்காவினதும் அதன் ஆதரவு நாடுகளின் பகிஸ்கரிப்பை பொருட்படுத்தி, ஏர்பின்ப் (Airbnb), கோகோ-கோலா(Coco-cola), இன்டெல்(Intel), ப்ராக்டர் &கம்பிள் (Procter & Gamble)), ரொயோட்டா(Toyota), மற்றும் விசா(Visa) போன்ற பிரபல சர்வதேச நிறுவனக்கள் வழமை போலானா  விளையாட்டுகளுக்கு அனுசரணை வழங்கி, நிதிப்பங்களிப்பு  செய்யும் தமது செயல்ப் பாட்டை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

COVID-19 இன் மற்றொரு பிறழ்வான மிகவேகமாக தொற்றுகின்ற  ஓமிக்றோன் பரவலுக்கு எதிரான சீனாவின் தடுப்பூசிகள் பெரும்பாலும் பயனற்றவை என்கின்ற மேற்குலகின் திட்டமிட்ட பரப்புரைகளால், சீனாவின் தடுப்பு ஊசிகளை தவிர்த்து வரும் உலகநாடுகளின்  போக்கை முறியடிக்க பெரும் பிரயத்தனம் எடுத்து வரும் சீன அரசு தனது நாட்டினுள் “பூஜ்ஜிய-கோவிட்” நிலைமையை ஏற்ப்படுத்தும் வேலைத் திட்டங்களின் பிரதி பலிப்பு   இந்த குளிர்கால  ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவிலும் எதிரொலித்தது.

15,000 பார்வையாளர்களைக் கொள்ளக் கூடிய ஆரம்ப நிகழ்வு  இடம்பெற்ற குருவிக் கூடு அரங்கினுள்  தேர்ந்தெடுக்கப் பட்ட குறிப்பிட்ட  சிலர் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருந்தனர்.  அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மாபெரும் தொலைக்காட்சியில் இருந்து உலகம் பூராவும் நிகழ்சிகளை நேரடியாக ஓளி பரப்பு செய்யும் அதி நவீன தொழில் நுட்ப்ப வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

விழாவில் கலந்துகொண்ட 26 வெளிநாட்டுத் தலைவர்களில், பாகிஸ்தானின் பிரதம மந்திரி இம்ரான் கான், செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்; சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்; மற்றும், ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புற்றின்,எகிப்தின் அதிபர் அப்டெல் பற்றா, கஜகஸ்தானின் இன்றைய தலைவர் ஆகியோர் முக்கியமானவர்கள்.

சீனாவின் இந்த ஒலிம்பிக் தொடக்க விழா அமைதி மற்றும் அன்பை வெளிப்படுத்தியது எனவும்,கொங்கொங், தைவான், திபெத்,அவுஸ்திரேலியா,  கனடா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்பவற்றின் மோதல் போக்குக்கு  சவால் விடும் வகையிலும் அமைக்கப் பட்டிருந்ததாக பக்க சார்பற்ற விமர்சகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.ஒன்றரை நூற்றாண்டுகால பொருளாதார போராட்டம்,சவால்கள் என்பவற்றிற்கு முகம் கொடுத்து  மீண்டும் செல்வம் கொழிக்கும் நாடாகவும், உலக அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியும் கொண்டிருக்கிறது சீனா எனவும் அவர்களது கருத்து வெளிப்பாட்டில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலக அரங்கை பல ஆண்டுகளாக அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும், ஒருபுறம். இந்த நாடுகளுக்கு சவாலாக வளர்ந்து வரும் சீனா,ஈரான், ரசியா, வடகொறியா,வெனிசுவேலா, பெலாரஸ், கியுபா,நிக்கராகுவா, சிரியா, etc…etc,. போன்றன,மற்றொரு புறம், இவற்றிற்கு மத்தியில் அல்லல்ப்படும் சில கிழக்கு ஐரோப்பிய,லத்தீன் அமெரிக்க,ஆபிரிக்க,ஆசிய   மூன்றாம் உலக நாடுகள், இதுதான் இன்றைய உலகின் அவல இருப்பு.

இந்த சூழலில் இடம்பெறும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில், நாடுகளிடையேயான அரசியல் சதுரங்கம் வெளிப்படையாகவே ஆடப்படுகின்றன..

இந்த அவலம் தொடரப் போகிறதா…? சுயாதீனமான போட்டிகள் சாத்தியமா…? போரற்ற,போட்டி.போறாமைகள் அற்ற சமத்துவ சமாதான உலகம் என்கிற உலகின் அதிநீண்ட  கனவுக்குள்ளேயே இவை அனைத்தும் அடங்குகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

Pagetamil

கிளிநொச்சியில் சிஸ்டத்தை (System) குழப்புகின்றவர்களால் சிஸ்டம் தோல்வி

Pagetamil

உதய சூரியன் அஸ்தமித்து 21 ஆண்டுகள் கடந்தது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!