31.3 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: வெளிநாட்டு வீரர்களில் அதிக விலைபோன லியாம் லிவிங்ஸ்டன்!

2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்குமும்பை இந்தியன்ஸ் அணியும், தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன. வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது.

இரண்டாவது நாள் ஏலம் இன்று தொடங்கியது. முதல் செட்டில் பேட்ஸ்மேன்கள் ஏலம் விடப்பட்டனர். முதல்நபராக தென்னாபிரிக்க வீரர் மார்க்கரம் ஹைதராபாத் அணியால் ரூ.26 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்திய வீரர் ரஹானே ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு செல்கிறார். மந்தீப் சிங்கை ரூ.1.1 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

இவர்களை தவிர, மற்ற வீரர்கள் யாரையும் இந்த செட்டில் ஏலம் எடுக்க அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, இங்கிலாந்து கப்டன் இயான் மார்கன், அவுஸ்திரேலியா கப்டன் ஆரோன் பின்ச், இந்திய வீரர் புஜாரா ஆகியோர் இதில் முக்கியமான வீரர்களாக இருந்தனர். ஆனால் எந்த அணியும் அவர்களை வாங்கவில்லை.

அடுத்த சுற்றில் சகலதுறை வீரர்கள் ஏலம்விடப்பட்டனர். முதல் நபராக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டனை வசப்படுத்த போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ.11.5 கோடி கொடுத்து வாங்கியது. மேற்கிந்திய தீவுகள் வீரர் டொமினிக் டிரேகஸ் ரூ.1.10 கோடிக்கு குஜராத் வசம் சென்றார். இந்திய வீரர்கள் ஜெயந்த் யாதவையும், விஜய் சங்கரையும் குஜராத் அணி முறையே ரூ.1.7 கோடி மற்றும் ரூ.1.4 கோடிக்கு வாங்கியது.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒடியன் ஸ்மித்தை பஞ்சாப் அணி ரூ.6 கோடி கொடுத்து வாங்கியது. தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜேன்சனை ஹைதராபாத் அணியால் ரூ.4.2 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்தியாவின் இளம் சகலதுறை வீரர் ஷிவம் துபேவை சென்னை அணி ரூ.4 கோடி கொடுத்து வாங்கியது. கடந்த சீசனில் சென்னை அணியில் இருந்து கிருஷ்ணப்பா கௌதமை இம்முறை ரூ.90 லட்சத்துக்கு லக்னோ அணி வாங்கியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment