2017ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான 847 சுகாதார உதவியாளர்களுக்கு சேவையில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதிகள் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை இலக்காகக் கொண்டு 1500 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1,169 பேர் தற்போது இத்திட்டம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களில் 847 பேர் சுகாதாரப் பணியாளருக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு குறித்த கொள்கை முடிவை அரசாங்கம் கோரும் வரை, கடந்த ஆண்டு ஒக்டோபரில் 322 தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் ஒப்பந்த காலங்கள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
தகுதியற்ற 847 பேர் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.