28.8 C
Jaffna
September 11, 2024
குற்றம்

11 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த ரிக்ரொக்: போதைமருந்து கொடுத்து நண்பர்களிற்கும் விருந்தாக்கிய ரிக்ரொக் பிரபலம்!

ரிக்ரொக்கிற்கு அடிமையாகிய 11 வயது  சிறுமியை, ரிக்ரொக் பிரபலமான இளைஞன் ஒருவன் போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதுடன், தனது நண்பர்களிற்கும் இரையாக்கிய கொடூரம் நடந்துள்ளது.

ரிக்ரொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மூலம் இடம்பெறும் விபரீதமான குற்றச் சம்பவங்கள் தினம் தினம் உலகெங்கும் பதிவாகி வருகிறது. அப்படியாக, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவமாக இதை கருதி விடாதீர்கள்.

இது, இலங்கையில், தலைநகர் கொழும்பை அண்மித்த பகுதியில் நடந்த சம்பவம்.

ரிக்ரொக்கினால் ஏற்பட்ட மோதலில் வெல்லம்பிட்டியில் 17 வயதான அப்துல் லதீப் என்ற இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் கொழும்பில் இடம்பெற்ற சில நாட்களின் பின்னர், இந்த ரிக்ரொக் குற்றம் இடம்பெற்றுள்ளது.

தலங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் குமார மற்றும் தமயந்தி தம்பதியினர். பிறப்பிலிருந்தே இருவரும் வாய்பேச முடியாதவர்கள். அவர்களிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் 11 வயதான அப்சரா.

இரண்டு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்பதில் பெற்றோர் குறியாக இருந்தனர். பிள்ளைகளை படிக்க வைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.

கொரோனா தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு, ஒன்லைன் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அப்சராவிற்கு ஒரு ஸ்மார்ட் தொலைபேசியை வாய்பேச முடியாத பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர்.

11 வயதான அப்சராவிற்கு அந்த ஸ்மார்ட் தொலைபேசி புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியது. பேஸ்புக், வட்ஸ்அப், ரிக்ரொக் என அறிமுகமாகி, சில மாதங்களிலேயே அவற்றிற்கு அடிமையாகி விட்டார். நாளின் பெரும் பகுதியை சமூக ஊடகங்களிலேயே கழித்தார். பேச்சுத்திறனற்ற அப்பாவிப் பெற்றோர், தமது மகள் இணையவழி கல்வியில் ஈடுபடுவதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

அப்சராவிற்கு பேஸ்புக், ரிக்ரொக் மூலம் பல நண்பர்கள் உருவாகினர். அவர்களில் பெரும்பாலோர், அப்சராவை விட வயதானவர்கள்.

கடந்த ஆண்டு ஒக்டோபரில், வட்ஸ்அப் மூலம் யுவதியொருவரின் அறிமுகமும் அப்சராவிற்கு கிடைத்தது. அந்த நண்பியின் பெயர் தானியா பெரேரா. கொழும்பு புறநகர் பகுதியில் வசிக்கும் 19 வயதானவர் டானியா. அவர் ரிக்ரொக்கிற்கு மட்டுமல்ல, போதைப்பொருளுக்கும் அடிமையானவர்.

ஓரிரு வாரங்கள் கழித்து தானியாவுக்கும் அப்சராவுக்கும் இடையே இறுக்கமான நட்பு ஏற்பட்டது. தமது கவலைகள், மகிழ்ச்சிகள் என எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டனர். இருவரும் தினமும், மூன்று, நான்கு முறை தொலைபேசியில் பேசிக் கொண்டனர்.

அப்சரா இதுவரை ஆண் நண்பர்கள் இல்லாமிருப்பது சரியல்ல என தினமும் தானியா திரும்பத்திரும்ப சொன்னார்.

அப்சராவின் வயதில் இருக்கும் தயக்கம், அச்சம் அனைத்தையும் போக்கிய டானியா, அவருக்கு, தானே ஒரு ஆண் நண்பரை அமைத்துத் தருவதாக தெரிவித்தார்.

அப்போதுதான், ரிக்ரொக் கிரி சமன் என்ற பெயரை டானியா உச்சரித்தார். ரிக்ரொக் கிரி சமன் தனது நண்பன் என்றும், அவரது அறிமுகத்தை ஏற்படுத்தித் தருவதாகவும் தானியா கூறினார்.

தானியா அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே, ரிக்ரொக் கிரி சமன் என்ற பெயர், அப்சராவிற்கு அத்துப்படி. ஏனெனில், ரிக்ரொக்கிற்கு அடிமையாகி விட்ட அப்சரா, ரிக்ரொக் கிரி சமனின் தீவிர ரசிகை. ரிக்ரொக் கிரி சமன் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவையும் தவறாமல் பார்த்து வருகிறார்.

அப்சராவின் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது. மணியடித்தது. காதலும், காமமுமான கலவையொன்று பரவியது.

ரிக்ரொக் கிரி சமன் என அழைக்கப்படுபவர் ஓஷத டிலான். இராஜகிரிய, கலபலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர். பாடசாலைப் பருவத்தில் இருந்தே சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர். பாடசாலைக் கல்வியை முடித்ததும், தலைமுடியை நீளமாக வளர்த்து, வெவ்வேறு வர்ணங்கள் பூசி, காதணிகளை அணிந்து, ரிக்ரொக்  வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.

விடலைப் பருவத்தினரின் ஆர்வங்களிற்கு தீனி போடும் அவரது வீடியோக்கள் வேகமாக பரவி, ரிக் ரொக் கிரி சமன் புகழடைய தொடங்கினார்.

இவர், சிங்கள தொலைக்காட்சிகளின் நடனப் போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் நடனம் கற்பித்தும் வந்தார். தன்னிடம் நடனம் கற்பதற்கு ஆட்களை ஈர்ப்பதற்காக ரிக்ரொக்கில் நடன வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ரிக்ரொக் கிரி சமன் மது, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையானவர்.

கிரி சமனின் தொலைபேசி இலக்கத்தை அப்சராவிடம் கொடுத்த டானியா, அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசுமாறும், தான் அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, ரிக்ரொக் கிரி சமனை தொலைபேசியில் அழைத்து பேசினார் அப்சரா. சாதாரணமாக இந்த உரையாடல் ஆரம்பித்தது. ஓரிரு நாளில் இருவரும் நெருக்கமாகினர். பின்னர், ரிக்ரொக் கிரி சமனின் காதலிகள் பட்டியலில் ஒருவராக அப்சராவும் இணைந்தார்.

டிசம்பர் 5ஆம் திகதி காலை. அப்சராவை தொலைபேசியில் அழைத்த கிரி சமன், அன்று இரவு நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அப்சரா மறுத்தார். தயங்கினார். ஆனால் கிரி சமன் அந்த தயக்கம், பயத்தை அகற்றினார். வாய்பேச முடியாத பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறலாமென யோசனை கொடுத்தார்.

பெற்றோர் உறங்கிய பின்னர் இரகசியமாக வீட்டை விட்டு வெளியில் வருமாறும், தான் நேரில் வந்து அழைத்து செல்வதாகவும், அதிகாலையில் பெற்றோர் விழிப்பதற்கு முன்பாக வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடுவதாகவும் நம்பிக்கையூட்டினார்.

அன்று இரவு பெற்றோர் உறங்கிய பின், குறிப்பிட்ட நேரத்தில் அப்சரா வீட்டுக்கு வெளியில் வந்தார். சொன்னபடி, கிரி சமன் அங்கு வந்து அப்சராவை ஏற்றிச் சென்றார்.

கிரி சமன் விருந்தில் மது, போதைப்பொருள் பாவித்தார். அத்துடன், அப்சராவிற்கு  வலுக்கட்டாயமாக மது கொடுத்துள்ளார்.

அப்சரா மது அருந்தியதும், கிரி சமன் அவரை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கிரி சமனின் நண்பன் ஒருவனும், அப்சராவை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினார்.

அதிகாலை 4.30 மணியளவில் அப்சரா வீட்டில் இறக்கி விடப்பட்டார். யாருக்கும் சந்தேகம் எழாமல் அறைக்குள் சென்று படுத்து விட்டார்.

டிசம்பர் 20, 21, 22 ஆம் திகதிகளிலும் பெற்றோருக்கு தெரியாமல் அப்சரா பார்ட்டிகளிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பார்ட்டிகளில் அப்சராவிற்கு போதை மருந்து கொடுத்து, கிரி சமல் பாலியல் வன்கொடுமை செய்தார்.சில சமயங்களில், அவரது நண்பர்களும் பாலியல் கொடுமைக்குள்ளாக்கினர். இப்படி பலமுறை வெளியில் சென்று வந்த போது, சில சமயங்களில் பெற்றோருக்கு பொய் சொல்லிவிட்டும் வெளியில் சென்று வந்துள்ளார்.

மீண்டும், ஜனவரி 1ஆம் திகதி தெஹிவளை புறநகர் பகுதியில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு அப்சராவை அழைத்துச் சென்றார்.

அங்கும் வழக்கத்தின் பிரகாரம் எல்லாம் நடந்தது. அதன் பின், கிரி சமனின் நண்பனாக களனியை சேர்ந்த ஒருவர், அப்சராவை வேறொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மறுநாள் மதியம் வரை அந்த வீட்டில் அப்சராவை தங்க வைத்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினார்.

இதற்குள், காலையில் அப்சராவை காணவில்லையென்றதும் பெற்றோர் வெலவெலத்து விட்டனர். உடனடியாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தனர்.

அவர்கள் முறைப்பாடளித்து விட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில், அப்சரா வீடு திரும்பினார். மகள் வீடு திரும்பிய தகவலை பெற்றோர், பொலிஸ் நிலையத்திற்கு  தெரிவித்தனர்.

அப்சரா காணாமல் போன விடயம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், அவரை முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கினர்.

சிறுமியை பரிசோதனைக்குள்ளாக்கிய போது, அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.

பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, நடந்த அனைத்தையும் வெளிப்படுத்தினார்.

11 வயதான சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ரிக்ரொக் கிரி சமன் உட்பட நான்கு இளைஞர்களை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ராஜகிரிய, மட்டக்குளி, களனி பிரதேசங்களை சேர்ந்த 19 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையவழி கற்கைக்காக பிள்ளைகளிற்கு ஸ்மார்ட் தொலைபேசி வாங்கிக் கொடுப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்து விடுவதில்லையென்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி. பிள்ளைகளின் கல்விக்காக ஸ்மார்ட் தொலைபேசி வாங்கிக் கொடுப்பது மட்டுமல்ல, அந்த தொழில்நுட்ப சாதனம், பிள்ளையை இருண்ட உலகத்திற்கு வழிகாட்டாமல் இருப்பதையும் உறுதி செய்வது பெற்றோரின் கடமையாகும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலையத்தில் 2 பெண்கள் வல்லுறவு!

Pagetamil

யாழ்ப்பாண ரிக்ரொக் அழகியிடம் மனதை பறிகொடுத்த வெளிநாட்டு அங்கிள் ரூ.45 இலட்சத்தை இழந்தார்!

Pagetamil

காதல் தகராறில் உயிரை மாய்த்த இளம் ஜோடி

Pagetamil

வவுனியாவில் குடும்பப் பெண்ணை கடத்திய முன்னாள் காதலன் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல்!

Pagetamil

நூதனமாக பணம் பறிக்க முயன்ற ஆணும், பெண்ணும் கைது!

Pagetamil

Leave a Comment