30.8 C
Jaffna
March 19, 2024
இலங்கை

யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி!

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளியிட்டுள்ளார்கள்

இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக பல்கலைகழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு செல்வதற்காக பல்கலைகழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு செல்ல முற்ப்ட்ட நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள்,ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோப் குழுவிலிருந்து மேலும் பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் விலகினர்!

Pagetamil

இந்திய மீனவர் அத்துமீறலுக்கு எதிராக யாழில் உணவுதவிர்ப்பு போராட்டம்

Pagetamil

வெடுக்குநாறிமலை விவகாரம்: பாராளுமன்றத்துக்குள் தமிழ் எம்.பிக்கள் போராட்டம்

Pagetamil

சிறையிலுள்ள கெஹலியவை ‘குழந்தையை போல’ கவனித்துக் கொள்கிறதா அரசு?

Pagetamil

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment