நாளை யாழ் மாவட்ட செயலகம் முற்றுகை!

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாளை (3) யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தி வடமராட்சி கரையோரங்களில் 3 நாட்களாக இடம்பெற்ற போராட்டங்கள், நாளை யாழ் நகரிற்கும் விஸ்தரிக்கப்படுகிறது.

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவர் சங்கங்களின் பங்குபற்றலுடன் நாளை யாழ் மாவட்ட செயலகம் முடக்கப்படவுள்ளது.

காலை 7 மணி தொடக்கம் மீனவர்கள் மாவட்ட செயலக வாயில்களை மூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

வடமராட்சி கரையோரங்களில் அதிக மீன் பிடிபடும் பருவம் நிலவுவதால், இந்திய ரோலர் மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன.

இதனால் வடமராட்சி கிழக்கு மீனவர்களின் வலைகள் அறுபடுவதுடன், உயிரிழப்புக்களும் நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்