27.4 C
Jaffna
October 1, 2022
உலகம்

விண்வெளியில் வானொலி அலைகளை வெளியிடும் மாயப்பொருள்: வேற்று கிரக மனிதர்களுடன் தொடர்பா?

விண்வெளியில் வானொலி அலைகளை வெளியிடும் மாயப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

அது குறித்து Nature எனும் சஞ்சிகையில் தகவல் வெளியிடப்பட்டது.

சூரிய மண்டலம் இருக்கும் Milky Way Galaxy-இல் அந்தப் பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பொருள் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை வானொலி அலைகளை வெளியிடுவதாகவும் ஒவ்வொரு முறையும் அலைகள் 1 நிமிடம் வரை நீடிப்பதாகவும் கூறப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொருள் 3 மாத காலமாக அலைகளை வெளியிட்டபோது முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

அது புதுவிதமான விண்வெளிப் பொருளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், பொருளுக்கும் வேற்றுலக மனிதர்களுக்கும் பூமிக்கும் தொடர்பில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமெரிக்க பிளாக் ஹொக் ஹெலிகொப்டரில் சடலத்தைத் தொங்கவிட்டபடி பறந்த தலிபான்கள்!

Pagetamil

அமெரிக்காவில் ஒமைக்ரோன் தொற்றால் முதல் மரணம்!

Pagetamil

உணவுச்சந்தைகளில் உயிருள்ள,வனங்களைச் சேர்ந்த பாலூட்டிகளை விற்பனை செய்வதற்குத் தடை: உலக சுகாதார அமைப்பின் விலங்குகள் நலப் பிரிவு வேண்டுகோள்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!