27.5 C
Jaffna
August 7, 2022
முக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை: தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

மாகாணசபை முறைமை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக அமைய நிலையில், அதை ஏற்றுக்கொள்ளும் எந்த விதமாக செயற்பாட்டிலும் ஈடுபடுவதில்லையென கட்சி தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.

சில நாட்களின் முன்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்ட சந்திப்பொன்றில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

‘மாகாணசபை முறைமையை ஏற்பதில்லையென்பதால் கடந்த மாகாணசபை தேர்தலில் எமது கட்சி புறக்கணித்திருந்தது. எனினும், இம்முறை நாம் தேர்தலில் போட்டியிடுவோம் என ஒரு அப்பிராயம் பரவியுள்ளது. எமது கட்சியிலுள்ள சிலரும் அந்த மனநிலையுடன் உள்ளனர். இதையடுத்தே, கடந்தவாரம் கட்சி தலைமை கூடி,மாகாணசபை தேர்தலில் கலந்து கொள்வதில்லையென முடிவானது.

இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் எழுதும் கடிதத்தை எதிர்த்துக் கொண்டு, மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை நியாயமற்றது. இதனை விரைவில் கட் உறுப்பினர்களிற்கு அறிவிப்போம’ என அந்த பிரமுகர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Related posts

முழுமையான அதிகாரமில்லாவிட்டால் நாம் தனிவழி செல்கிறோம்; கோட்டாவின் முன் மேசையில் அறைந்த சம்பந்தன்: நிலைமையை சமாளித்த கோட்டா- ஜனாதிபதி, கூட்டமைப்பு சந்திப்பில் நடந்தது என்ன?

Pagetamil

623 பொருட்களின் இறக்குமதிக்கு உத்தரவாத தொகை அதிகரிப்பு!

Pagetamil

ரணில் பிரதமராக நியமிக்கப்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்: இந்திய, அமெரிக்க தூதர்கள் கூட்டமைப்பிடம் தகவல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!