பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 40 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கடந்த 6 வருடங்களாக பிரதமருக்கு சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஏ. டி. எம். கார்டை பயன்படுத்தி இந்த தொகை அவ்வப்போது பெறப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த கணக்கில் உள்ள பணம் சம்பளமாக பெறப்பட்டதாக கணக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பணிக்குழாமின் பிரதானியாக கடமையாற்றி உதித் லொக்கு பண்டார மீதே நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன், பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் நாடாளுமன்ற விவகாரச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.எம்.லொக்குபண்டாரவின் மகனாவார்.
இந்த நிதி மோசடி அம்பலமானதையடுத்து குறித்த அதிகாரி பிரதமருடன் தொடர்புடைய அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதுடன், இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.