28.5 C
Jaffna
April 16, 2024
மலையகம்

நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்துக்கு நுவரெலிய பிரதேச சபை ஆதரவு: பிரதேச சபை உறுப்பினர் யோகா ஜெகநாதன்

நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு குறித்த வர்த்தமானி காலி மாவட்டத்துக்கு ஒரு விதமாகவும் நுவரெலியா மாவட்டத்தில் வேறு விதமாகவும் பாரபட்சமான முறையில் நடைமுறைப் படுத்துவது தொடர்பில் தான் சபையில் முன்வைத்த கருத்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை நுவரெலிய பிரதேச சபை சார்பாக அனுப்பி வைப்பதற்கும் இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நுவரெலிய பிரதேச சபை உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் அரச உத்தியோகத்தர் – சுயதொழில் முயற்சியாளர்களுக்கான இணைப்பாளருமான ஜெகநாதன் யோகநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 12 ம் திகதி நுவரெலிய பிரதேச சபை அமர்வு கூடியபோதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு அமைய 2018 ஆம் ஆண்டு அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவிருந்த வஜிர அபேவர்தன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அதற்கான ஒப்புதலையும் பெற்றுக் கொண்டார். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நுவரெலியா மாவட்டத்துக்கு ஐந்து, காலி மாவட்டத்துக்கு மூன்று என புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும் என பிரகடனம் செய்யப்பட்டது.

எனினும் இப்போது காலி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்றும் முழுமையான பிரதேச செயலகமாக செயற்படுகின்ற போதும் நுவரெலிய மாவட்டத்தில் அவை உப செயலகமாக மாத்திரம் நடைமுறைப்படுத்த எத்தனிப்பது நுவரெலிய மாவட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இங்கே இனம், மதம், மொழி வாரியாக அல்லாது ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் இடம்பெறும் அநீதிக்கு எதிராக மக்கள் மன்றம் என்ற வகையில் நுவரெலிய பிரதேச சபை இந்த விடயத்தைக் பையாள வேண்டும் என தான் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு சபையில் ஏகமனதான ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் விரைவில் மத்திய மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிரீஸ் மரம் முறிந்து விழுந்து 5 பேர் காயம்!

Pagetamil

விபத்தில் இரண்டு பெண்கள் பலி

Pagetamil

ஒருவர் குத்திக்கொலை

Pagetamil

தம்பியை கொலை செய்த கொடூர அண்ணன்!

Pagetamil

வாகனம் கவிழ்ந்து 7 பேர் காயம்!

Pagetamil

Leave a Comment