Site icon Pagetamil

கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து சொந்த பந்தங்களை சுற்றிப்பார்த்த யாழ்ப்பாண வாசி கைது!

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியை சேர்ந்த ஒருவர் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியை சேர்ந்த 44 வயதான அன்ரனி சென்பீட்டர் (மதன்) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வேதாரணியம், செம்போடை பகுதியில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் சுமார் 20 வருடங்கள் தங்கியிருந்த பின், 2012 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பியிருந்த இந்த நபர், கடந்த ஒக்ரோபர் மாதம் மீண்டும் தமிழகத்திற்கு, சட்டவிரோதமாக படகு மூலம் நுழைந்திருந்தார்.

வேதாரணியத்தை அண்மித்த பகுதியில் உறவினர்களுடன் தங்கியிருந்த பின்னர், தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிற்கு சென்று சந்தித்து விட்டு, செம்போடை பகுதிக்கு திரும்பிய போது, இரகசிய தகவலின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version