29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

43 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுவர்கள் விவகாரத்தில் அதிர்ச்சித் திருப்பம்!

கொட்டதெனியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போய், 43 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தொடர்பிலான பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறார்களை ஒப்படைத்த பெண்ணின் வீட்டிலேயே அவர்கள் ஒரு மாதமளவில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வீட்டில் தாயார் கடுமையாக அடிப்பதாலேயே, தப்பிச் சென்றதாக இரண்டு சிறார்களும் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் சுமார் 9 சிறார்கள் இருப்பதாகவும், குழந்தைகளை பராமரிக்கும் பணியை சரியாக செய்வதில்லைனெ 14, 10 வயதான சிறார்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு சிறார்களும் ஏற்கனவே ஒரு முறை வீட்டை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். ஏற்கனவே அவர்கள் தப்பிச் சென்றபோது, கொட்டதெனியாவ பொலிசார் அவர்களை மீட்டு, வீட்டில் ஒப்படைத்தனர்.

அப்போதிருந்து, தாம் கடுமையாக வீட்டில் தாக்கப்பட்டதாக இரண்டு சிறார்களும் தெரிவித்துள்ளனர்.

தாயார் வீட்டில் இல்லாத சமயத்தில் 100 ருபாயுடன் புறப்பட்டவர்கள், பேருந்தில் நீர்கொழும்பு சென்றதாக கூறப்படுகிறது.

நீர்கொழும்பில் வர்த்தக நிலையங்களில் உணவு வாங்கி சாப்பிட்டு, நாட்களை கடத்தியதாக அந்த சிறார்கள் முன்னர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

எனினும், சிறார்களை நேற்று முன்தினம் பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணின் வீட்டிலேயே ஒரு மாதத்திற்கு மேலாக சிறார்கள் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இரண்டு சிறார்களும் உணவு தேடி வந்ததாகவும், அவர்களிற்கு உணவளித்து விட்டு பொலிசாருக்கு அறிவித்ததாகவும் அந்த வீட்டு பெண் தெரிவித்திருந்தார்.

எனினும், அந்த வீட்டில் சிறார்கள் ஒரு மாதமாக தங்கியிருந்த தற்போது தெரிய வந்துள்ளது.

சிறார்கள் இருவரும் தங்கியிருந்த வீடு வாடகை வீடு. சிறார்கள் தங்கள் உறவினர்கள் என்றும், அவர்களின் பெற்றோருக்கு கோவிட் தொற்றியுள்ளதால், சிறார்களை தமது வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் அந்த பெண், அயலவர்களிடம் கூறியுள்ளார்.

எனினும், சில நாட்களின் முன்னர் சிறார்களிற்கு 700 ரூபா கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

மீண்டும் அந்த வீட்டிற்கே சிறார்கள் திரும்பிச் சென்ற போதே, வீட்டு உரிமையாளரான பெண், பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு சிறார்களும் மீண்டும் தமது பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை. ஒரு மாதம் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment