ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு நிக்கவெவ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று (06) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரி அணிந்து இருந்த நிலையில் 55 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் யாருடையது பற்றிய விபரம் தெரியவில்லை எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
-பதுர்தீன் சியானா-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1