குற்றம்

மாணவிகளிற்கு பாலியல் தொல்லை: முல்லைத்தீவு ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டில், முல்லைத்தீவு பொலிஸாரால் கைதான ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகரிலுள்ள கிறிஸ்தவ மகளிர் பாடசாலையொன்றின் ஆசிரியர், கடந்த டிசம்பர் 24​ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்குள் இரண்டு மாணவிகளுடன் நெருக்கமாக எடுக்கப்பட்ட செல்பி படங்கள், மாணவிகள் சிலருடன் இணைய அரட்டை அடித்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் கைதாகியிருந்தார்.

முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்ட, மாகாண கல்வி திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஆசிரியர் கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் டிசம்பர் 24ஆம் திகதி கைதாகினார்.

விசாரணைகளின் பின்னர் மறுநாள் (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, இன்று (04) வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அந்த வழக்கு, முல்லைத்தீவு நீதிபதி முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட​போது, சந்தேநகபரான ஆசிரியரின் விளக்கமறியல், ஜனவரி 18ஆம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்த 26 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

உள்ளூர் துப்பாக்கிகளுடன் மல்லாவியில் இருவர் கைது!

Pagetamil

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரும், ஊழியர்களும் கைது!

Pagetamil

ஒன்றாக தீக்குளித்து உயிரை மாய்த்த இளம் ஜோடி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!