28.1 C
Jaffna
June 27, 2022
இலங்கை

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமா வட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை.
மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
மட்டக்களப்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அனுராதபுரம் – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்.
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பழைய தள்ளுவண்டி பாணி பேருந்து: மன்னாரிலிருந்து யாழ் வந்தவர்கள் நடுவழியில் அந்தரிப்பு!

Pagetamil

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக(காணி) எஸ்.குணபாலன் நியமனம்!

Pagetamil

முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரச தலைவர்களுடன் பேசி தீர்க்க முடியும்: எச்.எம்.எம்.ஹரீஸ்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!